வக்ர நிவர்த்தி அடையும் சனி.. தீபாவளி முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை

Shani Margi 2023: நவம்பர் 4 ஆம் தேதி கும்ப ராசியில் சனிதேவன் வக்ர நிவர்த்தி அடையப் வருகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு சனியின் சிறப்பு ஆசியும், அதிர்ஷ்டமும் கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 20, 2023, 03:32 PM IST
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
  • கடினமான வேலைகள் கூட மிக எளிதாக முடிவடையும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும்.
வக்ர நிவர்த்தி அடையும் சனி.. தீபாவளி முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை title=

சனி வக்ர நிவர்த்தி பலன்கள் 2023: ஜோதிடத்தில் சனிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. சனிதேவன் நீதி மற்றும் பலன்களை வழங்குபவராகக் கருதப்படுகிறார். சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாகும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். சனி மெதுவாக சஞ்சரிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் நீண்ட நாட்களாக இருக்கும். அந்த வகையில் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார், வரும் நவம்பர் 4 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைவார். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனி நேரடியாகப் பயணிக்கப் போகிறது. எனவே சனியின் வக்ர நிவர்த்தி 12 ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும் ஜோதிடக் கணக்கின்படி மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவார்கள். இந்த மூன்று ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

மேஷம் (Aries Zodiac Sign)
மேஷ ராசிக்காரர்களுக்கு, 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைவது மிகவும் நன்மை பயக்கும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் வீட்டிற்கு அதிபதியாகி வருமானம் தரும் ஸ்தானத்தில் அமர்வார். அப்படிப்பட்ட நிலையில் நவம்பர் 4க்குப் பிறகு மேஷ ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காணலாம். இது தவிர பணியிடத்தில் பல சாதனைகளை அடைவீர்கள். உங்கள் செல்வம் பெருகும், மரியாதை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நல்ல லாபத்தைக் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | குரு பகவானின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு 2024 ஜனவரி வரை அமோக வாழ்க்கை!

ரிஷபம் (Taurus Zodiac Sign)
நவம்பர் 04 முதல் சனியின் நேரடி வக்ர நிவர்த்தி சஞ்சாரம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காணலாம். சனி உங்கள் ஜாதகத்தின் கர்ம வீட்டில் சஞ்சரிக்கும். இதனால் பொருள் வசதிகள் கூடும். நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும். நீங்கள் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள், இதன் காரணமாக மிகவும் கடினமான வேலைகள் கூட மிக எளிதாக முடிவடையும். இதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் புதிய வெற்றிகள் இருக்கும், வேலை தேடுபவர்களுக்கும் இந்த நேரம் நன்றாக இருக்கும். அதேபோல் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வேலைத் துறையில் பதவி உயர்வு கிடைக்கும், நிதித்துறையில் நன்மைகள் உண்டாகும்.

சிம்மம் (Leo Zodiac Sign) 
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவான் வக்ர நிவர்த்தி அடையவிருப்பது வரமாக இருக்கும். 04 நவம்பர் 2023க்குப் பிறகு சிம்ம ராசியின் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் ஏழாமிடத்தில் அமர்வார். ஏழாவது வீட்டில் சனி அமர்வது உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும். நிதி ஆதாயத்திற்கான சிறந்த வாய்ப்புகள் இருக்கும். இது தவிர, முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகளும் உள்ளன. நீதிமன்றத்தில் நடக்கும் சச்சரவுகளுக்கு சனி தீர்வைத் தருவார். இதனுடன் குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

 

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அக்டோபர் அட்டகாசமாய் இருக்கும்.. நல்ல காலம் ஆரம்பம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News