வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன, அதன் விளைவு நாடு, உலகம் மற்றும் பூமியில் தெரியும். அதன்படி தற்போது குரு மற்றும் சுக்கிரன் சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகம் சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த யோகம் கண்டிப்பாக அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடிய 3 ராசிகள் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம்... அதேபோல் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு தொட்ட காரியத்தில் எல்லாம் வெற்றி கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு (Sagittarius Zodiac Sign):
தனுசு ராசிக்காரர்களுக்கு சமசப்தம ராஜயோகம் சாதகமாக இருக்கும். ஏனெனில் சுக்கிரன் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் பதினொன்றாம் வீட்டில் இருக்கும்போது வியாழன் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் குழந்தை பாக்கியம் பெறலாம், ஒரு சிலர் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறலாம். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. மேலும், புதிய வேலையைத் தொடங்க நல்ல நேரம். அதே நேரத்தில், இந்த நேரத்தில் வணிகர்கள் நல்ல லாபம் பெறலாம். மேலும், இந்த நேரம் மாணவர்களுக்கு மிகவும் நல்லது. மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பைப் பெறலாம்.
மேலும் படிக்க | 2024 ஆம் ஆண்டு ராசிபலன்: சனி-ராகு-குருவால் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை
கும்பம் (Aquarius Zodiac Sign):
சமசப்தம ராஜயோகத்தை உருவாக்குவது இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். இந்த நேரத்தில், அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயமும் கூடும். நீங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சௌகரியங்களும், வசதிகளும் கூடும். வியாழன் மூன்றாவது வீட்டில் இருப்பதால், இந்த நேரத்தில் உங்கள் சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அதே சமயம் சகோதர சகோதரிகளால் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும் மற்றும் அவர்களால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கடகம் (Cancer Zodiac Sign):
சமசப்தம ராஜயோகம் (Samsaptak Rajyog) கடக ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். சுக்கிரன் உங்கள் ராசியிலிருந்து நான்காம் இடத்திற்குச் செல்வதால். அதனால், சுகபோகங்களும், வசதிகளும் பெருகும். இந்த நேரத்தில் நீங்கள் சொத்து, புதிய வீடு அல்லது வாகனம் வாங்கலாம் மேலும், இந்த நேரத்தில் உங்கள் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மேலும், இந்த நேரத்தில் வணிகர்கள் நல்ல லாபம் பெறலாம். இந்த நேரத்தில், கடக ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் அருளால், புத்தாண்டில் திருமண வாய்ப்புகள் கூடி, சுப பலன்களைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் தாயின் ஆதரவைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இடம் மாறும் சூரியன்! ‘இந்த’ 5 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ