கேரளாவில் அரசுப் பேருந்தை வழிமறித்த ஒரு யானை, அதன் கண்ணாடியை அதன் தந்தத்தால் உடைத்ததை காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. புதன்கிழமை மாலை, 50 பயணிகளுடன் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மூணாறில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் வீடியோவில், சாலையில் யானை நடந்து செல்வதைக் கண்டு, அரசுப் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். சிறிது நேரம் கழித்து, யானை பஸ்ஸை நோக்கிச் சென்றதால், உள்ளே இருந்த பயணிகள் பீதியடைந்தனர். காட்டு யானை, கண்ணாடியை சிறிது சிறிதாக உடைத்தது, ஆனால் ஓட்டுனர் பதற்றமில்லாமல் கூலாக ஜாண்டில் செய்தார். அதிர்ஷ்டவசமாக, யானை மேலும் சேதத்தை ஏற்படுத்தாமல் காட்டிற்கு திரும்பியது. ஓட்டுநர் தனது பயணிகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
யானை ஒன்று கோபமாக பஸ்ஸை மறிக்கும் வைரல் வீடியோவை தமிழக சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், ‘இந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் யார் என்று தெரியவில்லை, ஆனால் அவர் நிச்சயமாக மிஸ்டர் கூல் எனலாம். யானையின் கண்காணிப்புச் சோதனையை அவர் கையாண்ட விதத்தை பார்த்தால், இது வழக்கமாக அவர்களுக்கு இடையே பிஸினஸ் போல இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவை இங்கே காணலாம்:
இந்த யானை படையப்பா என்று அன்புடன் அழைக்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. இந்த வீடியோ மிகவும் வைரலாகி உள்ளது. பஸ் டிரைவரின் சமயோஜித சிந்தனை, கூலாக நிலைமையை கையாண்ட விதத்தை மக்கள் பாராட்டியுள்ளனர். சிலர் அதிகரித்து வரும் மனித-வனவிலங்கு மோதல் குறித்து கவலை தெரிவித்தனர்.
“டிரைவருக்கு உண்மையிலேயே தைரியம் தான்! நான் இந்த இடத்தில் இருந்தால், நிச்சயம் இதை செய்திருக்க மாட்டேன்... பயந்து போயிருப்பேன்!! ஆனால் பார்க்க அழகாக இருக்கிறது! ” ஒரு பயனர் ட்வீட் செய்தார்.
மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!
மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR