ஹைதிராபாத் காவலர்கள் டுகாட்டி வாகனத்தை பிரியத்துடுன் ஒட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!
இந்தியாவில் காவல்துறையினர் எப்போதும் வாகன ஓட்டிகளுடன் பிரச்சனை செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர் என பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பிம்பத்தினை உடைக்கும் வகையில் இரண்டு ஹைதிராபாத் காவலர்கள் வாகன ஓட்டியுடன் சகஜமாக பழகும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் ஹைதாரபாத்தில் தான் சந்தித்த காவலர்கள் இருவரை குறித்து ஜோகர் அஹமால் என்பவர் தனது வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். ஒரு ஹீரோ எக்ஸ்ட்ரீம் ரோந்துப் பைக்கில் வந்த இரண்டு காவலர்கள் அஹமாலின் டுகாட்டி பைக்கினை குறித்து கேட்டு, தாங்கள் அந்த பைக்கினை ஓட்டலாமா என கேட்கின்றனர். பின்னர் அஹமாலின் அனுமதியை பெற்று அந்த வாகனத்தின் மீது அமர்ந்து ஆசை தீர புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.
இந்த நிகழ்வானது காவல்துறையினரின் பைக் மீதான ஆர்வத்தினையும் பிரியத்தினையும் காட்டுகிறது என அஹாமல் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளளார்.
இந்திய காவல்துறை படையில் பெரும்பான்மையான மாநில காவல்துறையினர் தங்களின் ரோந்து பணிக்காக பந்தைய பைக்குகளை பயன்படுத்துகின்றனர். கொல்கத்தா, குஜராத் காவல்துறையினர் சிலர் ஹார்லி டேவிட்சன் பைக்குகளையும் வைத்திருப்பதாக தெரிகிறது. இளைஞர்களின் மத்தியில் டுக்காட்டி பைக்கிற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கையில், காவல்துறையில் பணிபுரியும் இளைஞர்களுக்கு மட்டும் ஆர்வம் இருக்காதா என்ன?
இந்த வீடியோவினை பதிவேற்றியுள்ள ஜோகர் அஹமால், எப்பாதும் காவல்துறையினர் கடுமையானவர்களாக இருப்பதில்லை. நாம் அவர்களிடம் பண்பாக நடந்துக்கொள்ளும் பட்சத்தில் நமக்கு கிடைக்கும் பதில்களும் பண்பாக தான் இருக்கும் என்பதினை இந்த காவலர்கள் மூலம் தெரிந்துக்கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.