Viral Video: பெரிய கருநாகம் ஒன்றை நூடுல்ஸ் போல் கபளீகரம் செய்யும் கொக்கு!

வன வாழ்க்கையில், வல்லவன் வாழ்வான் என்ற விதி மிக சரியாக பொருந்தும். வலிமையும் சாதுர்யமும் உடைய விலங்குகள், பலம் குறைந்த விலங்களை தனது இரையாக்கிக் கொள்ளும். இந்நிலையில், சாதுர்யமான கொக்கு ஒன்று பாம்பை உண்ணும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 15, 2023, 05:31 PM IST
  • கொக்கு ஒன்று பாம்பை கபளீகரம் செய்யும் வீடியோ.
  • பாம்பு என்றால் படையே நடுங்கும்.
  • சமூக ஊடகத்தில் வைரலாகும் திகிலூட்டும் வீடியோ
Viral Video: பெரிய கருநாகம் ஒன்றை நூடுல்ஸ் போல் கபளீகரம் செய்யும் கொக்கு! title=

உயிருக்கான போராட்டங்கள் அடங்கியது தான் விலங்குகள் வாழ்க்கை. சமூக ஊடகத்தில் விலங்குகள், குறிப்பாக, பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் மிகவும் வைரலாகும். இதற்கென தனி ரசிகர்கள் இருக்கின்றனர் என்றால் மிகையில்லை. சமூக ஊடகங்களில் மக்கள் அதிக நேரத்தை வீடியோக்களைப் பார்ப்பதில் செலவிடுகிறார்கள். அந்த வகையில் பாம்பு வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அவர்களை இந்த வீடியோ நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கும். வன வாழ்க்கையில், வல்லவன் வாழ்வான் என்ற விதி மிக சரியாக பொருந்தும். வலிமையும் சாதுர்யமும் உடைய விலங்குகள், பலம் குறைந்த விலங்களை தனது இரையாக்கிக் கொள்ளும். இந்நிலையில், சாதுர்யமான கொக்கு ஒன்று பாம்பை உண்ணும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. வித்தியாசமான மற்றும் திகிலூட்டும் வீடியோ பலரையும் அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது. இந்த வீடியோ நிச்சயம் ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் உள்ளது.

வைரலாகும் இந்த வீடியோவில் கொக்கு போன்று தோற்றமளிக்கும் பறவை ஒன்று, கரு நிற பாம்பு ஒன்றை ரசித்து ருசித்து விழுங்குவதைக் காணலாம். கிட்டத்தட்ட ஒரு நூடுல்ஸை சுவைப்பதை போல் கொக்கு அதனை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறது.பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். விலங்குகளில் பலவும் கூட பாம்பை (Snake) சீண்டி பார்க்கும் தைரியத்தை கொண்டிருப்பதில்லை. ஆனால், இங்கே கொக்கு ஒன்று பாம்பை சர்வசாதாரணமாக விழுங்குவதை பார்த்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள். தினமும் சமூக ஊடகங்களில் பல வினோதமான மற்றும் விசித்திரமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், இந்த வகை வீடியோ மிகவும் தனித்துவமானது.

மேலும் படிக்க | நாகப்பாம்பை வெச்சு செய்யும் குரங்கு: பீதியுடன் பார்க்கும் நெட்டிசன்ஸ்.. வைரல் விடியோ 

கொக்கு ஒன்று பாம்பை கபளீகரம் செய்யும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

வழக்கத்திற்கு மாறாக நடைபெறும் இந்த போராட்டம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொதுவாக கொக்குகளின் முக்கிய உணவு பூச்சிகள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகள், சிறிய பட்டாம்பூச்சிகள் மற்றும் மண்புழுக்கள். ஆனால் இந்த கொக்கு கொஞ்சம் வித்தியாசமானது தான். வைரலாகும் இந்த வீடியோ பார்ப்பவர் அனைவரையும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. பொதுவாக பாம்புகள் தவளையை உண்பது, கபளீகரம் செய்வது குறித்த செய்திகளையும் வீடியோக்களையும் தான் பார்த்திருப்போம். அந்த வகையில் கொக்கு இனத்தைச் சேர்ந்தது ப்ளூ ஹெரான் எனப்படும் நீலக்கொம்பு ஒன்று பாம்பை வேட்டையாடும் இந்த த்ரில்லர் வீடியோ உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என்றால் மிகையில்லை. 

பெரிய நீல ஹெரான்கள் வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இனமாக கருதப்படுகின்றன. இருப்பினும், தென் அமெரிக்கா, கனடா, தெற்கு ஐரோப்பா மற்றும் ஐஸ்லாந்தின் வடக்கு கடற்கரை உட்பட உலகில் பல்வேறு இடங்களிலும் நீங்கள் இதனை பார்க்கலாம். இந்த நீர்ப்பறவைகள் பொதுவாக இரையைத் தனியாகத் தேடுகின்றன. அவற்றின் உணவில் பெரும்பாலானவை பெரிய மீன்கள், பாம்புகள் முதல் சிறிய மைனாக்கள் ஆகியவை. அளவில் பெரிய பறவைகள் மற்றும் நிறைய உணவு தேவை. இவற்றில், பெரும்பாலானவை ஒரு நாளைக்கு இரண்டு பவுண்டுகள் வரை மீன் சாப்பிடுகின்றன. 

மேலும் படிக்க | Viral Video: அடக் கொடுமையே... பேக்ட்ரியில இப்படித் தான் ஐஸ் கட்டி தயாரிக்கறாங்களா...!

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News