ஆழ்கடலில் 93 நாள் குடித்தனம்.... 10 வயது இளமையாக மாறிய அதிசயம்!

ஆழ்கடலில் குடித்தனம் நடத்த முடியுமா... என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழக்கூடும். முடியும் என்பதோடு, அதனால், 10 வயது குறையும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 20, 2024, 02:38 PM IST
  • ஆழ்கடலில் வசிப்பதன் அனுபவத்தை விளக்கிய ஜோசப் டிடூரி
  • வளர்சிதை மாற்றத்திலும் பெரிய அளவில் மாற்றம்.
  • உடலில் ஏற்பட்ட வியக்கத்தக்க மாற்றங்கள்.
ஆழ்கடலில் 93 நாள்  குடித்தனம்.... 10 வயது இளமையாக மாறிய அதிசயம்! title=

ஆழ்கடலில் குடித்தனம் நடத்த முடியுமா... என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழக்கூடும். முடியும் என்பதோடு, அதனால், 10 வயது குறையும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஜோசப் டிடூரி (Joseph Dituri), என்பவர் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீருக்கடியில் தங்கியிருந்து, சாதனை படைத்துள்ளார். ஆய்வு ஒன்றிற்காக அவர் இவ்வாறு ஆழ்கடலில் தங்கிருப்பதால், ஏற்படும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் அறிய விரும்பினர். 

அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்த பிறகு, ஜோசப் டிடூரி, ஆழ்கடலில் உள்ள சிறப்பாக அமைக்கபப்ட்ட தனது  இருப்பிடத்தை வெளியே வந்த போது, ​​'10 வயது இளமையாக' மாறிவிட்டார் என்பதை அறிந்து விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

உடலில் ஏற்பட்ட மாற்றங்கள்

மருத்துவ ஆய்வு மேற்கொண்ட போது, ஜோசப் டிடூரியின் குரோமோசோம்களின் முனைகளில் உள்ள டிஎன்ஏ கேப்களின் அளவை ஆய்வு செய்த போது, வயதிற்கு ஏற்ப சுருங்கும் தன்மை கொண்ட அவை, சுருக்கம் நீங்கி அவை நீளம் ஆகியுள்ளன.  அதுமட்டுமின்றி, அவரது ஸ்டெம் செல் எண்ணிக்கையும் அதிகரித்தது. அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்பட்டது.

ஜோசப் டிடூரியின் தூக்கத்தின் தரமும் சுழற்றியும் சிறப்பாக ஆனது. அவரது கொலஸ்ட்ரால் அளவு 72 புள்ளிகள் குறைந்துள்ளது. மேலும் அவரது அழற்சி பிரச்சனைகள் பாதியாக குறைந்தது. நீருக்கடியில் அழுத்தம் காரணமாக இந்த மாற்றங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது உடலில் பல ஆச்சர்யபடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆழ்கடலில் வசிப்பதன் அனுபவத்தை விளக்கிய ஜோசப் டிடூரி

"வெளியில் இருந்து எந்த வித தொடர்பும் இல்லாத, இந்த இடங்களில் ஒன்றில் சில காலம் வசிப்பது, இன்றையை காலகட்டத்தில் அவசியமான ஒன்று.  இரண்டு வார விடுமுறைக்கு இங்கு செல்லுங்கள். அங்கு  நீங்கள் சிறப்பாக ஓய்வெடுக்கலாம் மற்றும் உயர்தரமான இயற்கை மருத்துவத்தின் பலனை அனுபவிக்கலாம்" என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | உயிரைப்பறித்த உடலுறவு! விபரீதத்தில் முடிந்த செக்ஸ் விளையாட்டு..பின்னணி என்ன?

ஆழ்கடல் முயற்சியில் மற்றொரு பெரிய சாதனை

அவரது தனது வளர்சிதை மாற்றத்திலும் பெரிய அளவில் மாற்றம் இருந்ததாக ஜோசப் டிடூரி கூறினார். நீருக்கடியில் இருக்கும் நேரத்தில், வாரத்தில் ஐந்து நாட்கள், தனது உடற்பயிற்சியை தொடர்ந்ததாகவும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உடற்பயிற்சி செய்வதாக அவர் கூறினார். ஜோசப் டிடுரி தனது 93 நாள் ஆழ்கடல் முயற்சியில் மற்றொரு பெரிய சாதனையை நிகழ்த்தினார். நீருக்கடியில் 73 நாட்கள் வாழ்ந்து சாதனை செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை முறியடித்தார். நீருக்கடியில் அதிக நேரம் செலவழித்தவர் என்ற பெயர் பதிவாகியுள்ளது. இத்தனை நாட்கள் நீருக்கடியில் தங்கியிருந்த தனது வயது குறைந்துவிட்டது, அதாவது இளமையாகிவிட்டதாக பேராசிரியர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | சவுதி அரேபியாவில் பிக்கினி உடையில் வலம் வந்த அழகிகள்... மூக்கில் விரல் வைக்கும் உலக நாடுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News