மாப்பிள்ளை போட்ட குத்தாட்டம் : சிரித்து சின்னாபின்னமான நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ!!

Funny Groom Dance Video: இந்த வீடியோவை பார்த்தால் 'என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் இப்படியா?' என சொல்லத் தோன்றும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 5, 2023, 07:53 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் lavkesh.kushwaha.16 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியுஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மாப்பிள்ளை போட்ட குத்தாட்டம் : சிரித்து சின்னாபின்னமான நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ!! title=

வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இதில் வரும் செய்திகளும் வீடியோக்களும் நம்மை நம் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கின்றன, சில சிந்திக்கவும் வைக்கின்றன. 

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது. நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. இவற்றில் சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். 

திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது.  இது மணமகன் மற்றும் மணமகளுக்கு தங்கள் வாழ்வின் மிக முக்கியமான நாளாக இருக்கிறது.

மணமக்கள் தங்கள் மகிழ்ச்சியை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். சமீபத்தில் இந்த வெளிப்பாட்டின் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இது நாம் பார்த்து வியக்கும் வகையில் உள்ளது. 

மேலும் படிக்க | ’பங்காளி அந்த பக்கம் கொஞ்சம் கூசுப்பா’ பாசத்தால் சிங்கத்தை உருக வைக்கும் நாய்: வைரல் வீடியோ

மாஸாக நடனம் ஆடிய மணமகன்

இந்த வீடியோவில் ஒரு திருமண கொண்டாட்டத்தை காண முடிகின்றது. இதில் மணமகனும் அவரது நண்பர்களும் அட்டகாசமான முறையில் நடனமாடுவதை காண முடிகின்றது. இதில் மணமகனின் முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சியை காண்கிறோம். அவரது நண்பர்களுக்கும் தங்கள் தோழனின் திருமணம் எத்தனை சந்தோஷத்தை அளித்துள்ளது என்பதை விடியோவை பார்த்து நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. மாப்பிள்ளை தங்க நிற ஷேர்வாணி அணிந்து அமர்க்களமாக காட்சியளிக்கிறார். துவக்கம் முதல் முடிவு வரை மணமகன் மற்றும் அவரது நண்பர்கள் காட்டும் உற்சாகம் நம்மையும் பற்றிக்கொள்கின்றது. 

மாப்பிள்ளையின் அட்டகாசமான நடனத்தை இந்த வீடியோவில் காணலாம்:

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் lavkesh.kushwaha.16 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  இதற்கு ஏகப்பட்ட வியுஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'மாப்பிள்ளைக்கு ஏகப்பட்ட சந்தோஷம்' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'அட்டகாசமான டான்ஸ்.. இவர் கண்டிப்பாக ஒரு நடன ஆசிரியராகத் தான் இருக்க வேண்டும்' என் மற்றொரு பயனர் கூறியுள்ளார். 'இந்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் கொடுத்து வைததவர்' என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். 'வாவ்.... சூப்பராக ஆடுகிறார். இவர் ஆட்டத்தில் எவ்வளவு உற்சாகம்!! பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது' என ஒரு பயனர் மாப்பிள்ளையை புகழ்ந்து தள்ளியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | இணையத்தை தெறிக்கவிட்ட ஆட்டம்.... சான்சே இல்ல: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News