பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் சனிக்கிழமை (ஜனவரி 29, 2022) விண்கல் ஒன்று வானத்தில் இருந்து ஒளிர்ந்தது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
கீழே விழும் எரிகல்லை பலர் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும பதிவு செய்துள்ளனர். விண்கற்கள் வானத்தில் இருந்து விழும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
உள்ளூர் நேரப்படி ஜனவரி 29ம் தேதியன்று இரவு 7:15 மணியளவில் விண்கல் விழுவது வானில் தெரிந்ததாக கூறப்படுகிறது. இது கராச்சியில் மட்டுமல்ல, சிந்து மாகாணத்தின் வேறு சில பகுதிகளிலும் காணப்பட்டது.
Exclusive Scenes of Falling of Meteor in Karachi Last Night..#BreakingNews #Meteor #Karachi pic.twitter.com/MH1yVzoYxt
— Weather Of Karachi- WOK (@KarachiWok) January 30, 2022
பலரால் நேரடியாக பார்க்கப்பட்ட இந்த வானியல் அதிசயத்தை கண்ட உள்ளூர் வானியலாளர்கள், இது, பூமியின் வளிமண்டலத்தில் எரியும் ஒரு விண்வெளி பாறை என்பதை உறுதிப்படுத்தினார்கள்.
ALSO READ | வானிலிருந்து விழுந்த 2.78 கிலோ எடையுள்ள விண்கல்.... பீதியில் மக்கள்
அத்தகைய நிகழ்வு பெரும்பாலும் 'விழும் நட்சத்திரம்' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அது உண்மையில் ஒரு நட்சத்திரம் வானத்திலிருந்து விழும்போது அதை பார்ப்பதும், அப்போது ஏதாவது ஒன்றை வேண்டிக் கொண்டால், அந்த விருப்பம் நிறைவேறும் என்றும் பல கலாச்சாரங்களில் நம்பிக்கை நிலவுகிறது.
விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், விண்கல் என்பது புவியீர்ப்பு விசையால் பூமிக்கு இழுக்கப்படும் ஒரு விண்வெளிப் பாறையானது, பூமியை நோக்கி விழும் போது, அது பூமியின் வளிமண்டலத்தில் பயணிக்கிறது.
இந்த செயல்முறை ஏற்படுத்தும் அபரிமிதமான உராய்வு அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. அப்போது, விண்கல் ஒளிருவதைக் காணலாம். பெரும்பாலான விண்கற்கள் பூமியின் மேற்பரப்பை அடையும் முன்பே எரிந்து விடுகின்றன.
ஆனால் அவை மிகவும் பெரியதாக இருந்தால், அவை பூமியை நோக்கி வந்தடையும். இவை 'விண்கற்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
வானத்தில் எரியும் விண்கற்களைப் பார்ப்பது ஒரு அழகான காட்சியாக இருக்கும். ஆனால் மிகப் பெரிய அளவிலான விண்கற்கள் பூமியுடன் மோதினால், அது மனிதர்கள் வசிக்கும் ஒரே கிரகமான பூமியை அழித்துவிடும் என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்.
ALSO READ | வீட்டிற்குள் விழுந்த விண்கல்; நூலிழையில் உயிர் தப்பித்த பெண்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR