கேதார்நாத் சிவனை தரிசிக்க எவ்வளவு தடைகள்? சமூக ஊடகங்களில் வைரலாகும் கேதார்நாத் பயணக்கதைகள்!

Chardam Yatra Latest Update  : உத்தரகாண்டில் அமைந்துள்ள இந்து மத புனிதத் தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்திரி மற்றும் கங்கோத்திரிக்கு செல்லும் பயணத்தைசார் தாம் யாத்திரை என்று அழைக்கிறோம்.  இந்த யாத்திரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்... 

அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாகும் நான்கு புனிதத் தலங்களுக்கான யாத்திரை தொடர்பான தகவல்கள், பக்தி தொடர்பானது அல்ல, இந்த நான்கு கோவில்களில் தரிசனம் செய்வதற்கு பணம் அல்லது அதிர்ஷ்டம் மட்டுமே தேவை என்பது கவலையைத் தருகிறது

1 /7

உத்தரகாண்டின் சார் தாம் யாத்திரை செல்ல வேண்டும் என்றல், நீங்கள் விஐபி அல்லது விவிஐபியாக இருக்க வேண்டும், அல்லது பணம் செலவழிக்க தயங்காதவர்களாக இருக்க வேண்டும் என்ற விமர்சனங்களின் பின்னணி என்ன?   

2 /7

கேதார்நாத் புனித யாத்திரை முழு குழப்பத்தின் மையமாக மாறிவிட்டது. கடைக்காரர்கள் மற்றும் பிறர் பணத்தை கொள்ளையடிக்கும் இடமாக கோவிலை சுற்றியுள்ள இடங்கள் மாறிவிட்டன... இது அண்மையில் பயணம் செய்தவர்களின் வருத்தம்

3 /7

கௌரிகுண்டில் இருந்து தொடங்கும் கேதார்நாத் பயணத்தில் சோன்பிரயாக்கிலிருந்து கௌரிகுண்ட் செல்ல உள்ளூர் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். 5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த யாத்திரை செல்லும் பாதை அனைத்தும் குண்டும் குழியுமாக பயணத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை என்பது புகார்  

4 /7

கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதையில் ஆழமான பள்ளத்தாக்குகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்தப் பாதை மிகவும் கரடுமுரடாகவும், மோசமானதாகவும் உள்ளது

5 /7

பாதை முழுவதும் பெரிய கற்கள் அங்குமிங்குமாய் சிதறிக் கிடக்கும். குதிரை சாணம் நிரம்பிய பாதையில் அலுப்பு ஏற்படுத்தும் பயணத்தில் கோவிலின் வாசலுக்கு செல்லும்போது உடல் மிகவும் சோர்வடைந்திருக்கும்.  

6 /7

கேதார்நாத் பயணத்தில் மருத்துவ உதவிகளையோ பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தையோ நீங்கள் எங்குமே பார்க்க முடியாது. தேநீர், ஜூஸ் என ஏதேனும் அருந்தினால் அதற்கு கட்டணமும் அதிகம். தங்குவதற்கான முகாம் ஏற்பாடுகள் செய்தால், அதற்கு ரூ.4,000 முதல் ரூ.10,000 வரை செலுத்த வேண்டியிருக்கும். 

7 /7

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை