அதிக நேரம் மொபைல் போன் பார்பதால் ஏற்படும் விளைவுகள் !

மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் மற்றும் விளைவுகள் குறித்து இங்கு அறிவோம் !

 நீங்கள் அதிக நேரம் மொபைல் போன் பார்ப்பவர்களா அப்போ இது உங்களுக்குதான் கவனத்தில் வைத்திருங்கள்.உலகத்தில் மொபைல் போன் பயன்படுத்திவரும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகின்றது.அதில் இப்போது டெக்னாலஜி வளரும் காலமாகிவிட்டது.அனைத்து வசதிகளும் மொபைல் போனில் வந்துவிட்டது..இதனால் பெரும்பாலும் மொபைல் போன் வாங்கும் கட்டாயத்திற்க்கு ஆளாகிவிட்டீர்கள்.மேலும் இதுப் பற்றிய தகவல் இங்குப் பார்போம்..

1 /8

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால்  உடல் சூட்டை அதிகரிக்கும்.மேலும் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

2 /8

செல்போன் பார்க்க ஒரு முறைத் தொடங்கிவிட்டால் அதற்கு அடிமையாக மாறிவிடும் நிலைக்கு நீங்கள் தள்ளபடுகிறீர்கள் எனக் கூறப்படுகிறது.

3 /8

நுரையீரல் சுவாசிப்புப் பிரச்சனை ஏற்படும்.இதனால் சுவாசிக்க முடியாத நிலைமைக்கு நீங்கள் ஆளாகபடுவீர்கள் எனக் கூறப்படுகிறது.

4 /8

செல்போனை நீங்கள் குனிந்தவாறு பயன்படுத்துவதால் முதுகு எழும்பு வலையத் தொடங்கும்.இதனால் முதுகு வலி ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது.

5 /8

கண்களில் தெளிவற்ற பார்வையும்,மங்களாகவும் சிறிது நேரம் பார்த்தால் கூட தலைவலி ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது.

6 /8

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகின்றோம்.இதனால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது குறைவாகிறது எனக் கூறப்படுகிறது.

7 /8

குழந்தைகளிடம் செல்போன் கொடுத்து பழகுவதால் குழந்தைகள் படிப்பைவிட செல்போனிற்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

8 /8

செல்போன் பயன்படுத்தி வரும் அதிகமானோர் மன அழுத்தத்தில் இருப்பதாக அறிவியல் ஆய்வுக் கூறுகின்றது.