TVS Ronin: அசத்தல் லுக், அபார அம்சங்கள், புகைப்படங்கள் இதோ

TVS Ronin: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பிரீமியம் பைக்கின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 'ரோனின்' என்ற தனது சமீபத்திய பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 225-சிசி கொண்ட இந்த பைக்கின் அறிமுகத்தின் மூலம், நிறுவனம் நாட்டில் பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் நுழைந்துள்ளது. டிவிஎஸ் ரோனின் இந்த மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் கிடைக்கும்.

1 /4

டிவிஎஸ் ரோனின் ஆரம்ப விலையை ரூ.1.49 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த பைக் முறையே ரூ.1.49 லட்சம், ரூ.1.56 லட்சம் மற்றும் ரூ.1.69 லட்சம் என மூன்று டிரிம்களில் வருகிறது. (படம்: tvsmotor.com)

2 /4

இந்த பைக்கின் வடிவமைப்பில் பல வித புதுமைகள் உள்ளன. டூயல் சேனல் ஏபிஎஸ், வாய்ஸ் அசிஸ்டன்ஸ், மற்றும் மேம்பட்ட இணைப்பு போன்ற பல வசதிகளும் இதில் உள்ளன. இது தவிர, இந்த பைக் பிரத்யேக பிராண்டட் பொருட்கள், தனிப்பயன் பாகங்கள், கான்பிகரேட்டர் மற்றும் ஒரு பிரத்யேக அனுபவ திட்டத்துடன் வருகிறது. (படம்: tvsmotor.com)

3 /4

இந்த பைக்கில் அலாய் வீல்கள், எல்இடி விளக்குகள் மற்றும் குரல் உதவி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் (ஐஎஸ்ஜி) போன்ற பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளன. (படம்: tvsmotor.com)

4 /4

டிவிஎஸ் மோட்டாருக்கு ரோனின் அறிமுகமானது குறிப்பிடத்தக்க மைல்கல் என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேணு தெரிவித்தார். இந்த பைக் சிரமமற்ற மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வேணு குறிப்பிட்டார். (படம்: tvsmotor.com)