அகவிலைப்படி உயர்வு... அமைச்சரவை கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு: சம்பள உயர்வு கணக்கீடு இதோ

7th Pay Commission: இன்று தில்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என கூறப்படுகின்றது. 

7th Pay Commission: சம்பள உயர்வு: சம்பள உயர்வு கணக்கீடு: ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) 18,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அகவிலைப்படி 3% அதிகரித்தால் அவருக்கு சம்பளத்தில் ரூ.540 மாத அதிகரிப்பு இருக்கும். ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும். அகவிலைப்படி 4% அதிகரித்தால், அவரது மாத சம்பளத்தில் 720 ரூபாய் அதிகரிப்பு இருக்கும். ஆண்டு சம்பளம் ரூ.7,440 அதிகரிக்கும்.

1 /11

1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அகவிலைப்படி உயர்வை அரசு அக்டோபர் 9, அதாவது இன்று வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. 

2 /11

இன்று தில்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என கூறப்படுகின்றது. இதற்காக ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3 /11

7வது ஊதியக் குழு: அகவிலைப்படியில் 3 முதல் 4 சதவீத அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்புக்கு பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 53%-54% ஆக அதிகரிக்கும். 

4 /11

இதற்கு முன்னர் ஜனவரி மாதம் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4% அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஆர் இரண்டும் 50% ஆக உயர்ந்தன. இதற்கான அறிவிப்பு மார்ச் 2024 -இல் வெளிவந்தது.

5 /11

தற்போது ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வுக்காக (DA Hike) அனைவரும் காத்திருக்கிறார்கள். ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில், அகவிலைப்படி 3%-4% அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

6 /11

அகவிலைப்படி எப்போது அறிவிக்கப்பட்டாலும், ஜூலை முதலான டிஏ அரியர் (DA Arrears) தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். இதன் காரணமாக அடுத்த மாத சம்பளத்தில் நல்ல ஏற்றத்தை காண முடியும்.

7 /11

பணவீக்கம் அதிகரிக்கும் போது, அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த கொடுப்பனவு அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

8 /11

நாட்டின் அப்போதைய பணவீக்கத்தின் படி 6 மாதங்களுக்கு ஒரு முறை அதன் கணக்கீடு செய்யப்படுகிறது. இது அந்தந்த ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் படி கணக்கிடப்படுகிறது. நகர்ப்புற, செமி நகர்ப்புற அல்லது கிராமப்புறங்களில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி வேறுபட்டிருக்கலாம்.

9 /11

மத்திய அரசு ஊழியர்களுக்காக சூத்திரம்: [(அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) கடந்த 12 மாதங்களின் சராசரி – 115.76)/115.76]×100 / பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான கணக்கீடு: (கடந்த 3 மாத நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100)- 126.33 ))x100.

10 /11

சம்பள உயர்வு: சம்பள உயர்வு கணக்கீடு: ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) 18,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அகவிலைப்படி 3% அதிகரித்தால் அவருக்கு சம்பளத்தில் ரூ.540 மாத அதிகரிப்பு இருக்கும். ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும். அகவிலைப்படி 4% அதிகரித்தால், அவரது மாத சம்பளத்தில் 720 ரூபாய் அதிகரிப்பு இருக்கும். ஆண்டு சம்பளம் ரூ.7,440 அதிகரிக்கும்.  

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.