மழையை என்ஜாய் பண்ணனுமா... 7 இடங்களுக்கு கண்டிப்பாக சுற்றுலா போங்க!

சுற்றுலா செல்வதற்கு கால நேரம் என்பது ரொம்ப முக்கியம். குறிப்பாக, சரியான காலத்தில் சரியான இடத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டும். அந்த வகையில், இந்த பருவமழைக் காலத்தில் தென்னிந்திய மாநிலங்களில் சுற்றுலா செல்ல டாப்பு டக்கரான 7 இடங்களை இங்கு காணலாம்.

தென்னிந்தியா மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல உங்களுக்கு பெரிய செலவு ஆகாது. பொது போக்குவரத்தும் கூட உங்களுக்கு எளிமையாக கிடைக்கும். இந்த பருவமழை காலத்தில் இந்த 7 இடங்களுக்கு நிச்சயம் செல்லலாம். 

 

1 /8

தென்னிந்தியாவில் சமீப நாள்களாக பல பகுதிகள் மழை கொட்டி வருகிறது. இந்த மழை காலத்தில் தென்னிந்தியாவில் சுற்றுலா செல்ல தகுதிவாய்ந்த 7 இடங்களை இதில் காணலாம்.   

2 /8

ஹம்பி (கர்நாடகா): UNESCO உலக பாரம்பரிய தளம் இதனை அங்கீகரித்துள்ளது. பழமைவாய்ந்த கட்டடங்கள் விஜயநகர பேரரசின் எச்சங்களாக இன்றைய காலத்தில் எஞ்சி நிற்கின்றன. இந்த பருவமழை காலத்தில் துங்கபத்ரா ஆறும் செழிப்பா ஓடும் என்பதால் இந்த இடத்தை தவறவிடாதீர்கள்.  

3 /8

உடுப்பி, கோகர்னா (கர்நாடகா): இந்த இரண்டு நகரங்களும் கர்நாடகாவின் அழகான மற்றும் செழிப்பான கடலோர நகரங்கள் ஆகும். ரம்மியான கடற்கரைகள், பழமைவாய்ந்த கோயில்கள், பச்சை போர்த்திய நிலங்கள் என இந்த பருவமழை காலத்தில் இந்த இடங்களையும் தவறவிட்டுவிடாதீர்கள்    

4 /8

வயநாடு (கேரளா): பனி படர்ந்த மலைகள், தேயிலை தோட்டங்கள் என பல்லுயிர் சூழல் நிறைந்த இடமாகும். கேரளாவில் இந்த பகுதி சுற்றுலாவுக்கு பெயர் போனது. குழந்தைகள், பெண்கள் என குடும்பத்துடனும் இங்கு சுற்றுலா செல்லலாம். 

5 /8

கூர்க் (கர்நாடகா): இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றழைக்கப்படும் இந்த கூர்க் நகருக்கு நிச்சயம் இந்த பருவமழை காலத்தில் நீங்கள் செல்ல வேண்டும். காப்பி தோட்டங்கள், பனிகள் அடர்ந்த மலைகள் என எங்கு பார்த்தாலும் பசுமையான காட்சிகளை மிஸ் பண்ணாதிங்க  

6 /8

மூணார் (கேரளா): கேரளாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாகும். தேயிலை தோட்டங்கள், நீர் வீழ்ச்சி, எப்போதும் குளிர் என மூணாரை இந்த பருவமழை காலத்தில் ரசிக்காமல் இருக்கவே முடியாது.  

7 /8

மகாபலிபுரம் (தமிழ்நாடு): சென்னையில் இருந்து மிக அருகில் இருக்கும் சுற்றுலா தளமான இதை இந்த மழை காலத்தில் பார்ப்பது தனி ரசனையாக இருக்கும். பல்லவர் கால சிற்பங்கள், கோயில்கள், கடற்கரைகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும்.  

8 /8

கொடைக்கானல் (தமிழ்நாடு): பெரிய ஏரிகள், நீர் வீழ்ச்சிகள், உயரமான மரங்கள் கொண்ட அர்ந்த காடுகள் ஆகியவற்றை காண நீங்கள் நிச்சயம் இந்த சீசனில் கொடைக்கானல் போகலாம். மஞ்சும்மல் பாய்ஸ் பார்த்து ரசித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் உடனே இங்கு ஒரு பிளான் போடுங்கள்.