IPL 2024: இந்த தொடரில் அதிக சராசரி கொண்ட டாப் 7 பேட்டர்கள் - லீக் சுற்று வரை!

Best Batting Average In IPL 2024: ஐபிஎல் 2024 தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இதில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள டாப் 7 வீரர்களை இங்கு காணலாம்.

பேட்டிங் சராசரி (Batting Average) என்பது ஒரு பேட்டர் அடித்துள்ள மொத்த ரன்களை, அவர் எத்தனை முறை அவுட்டாகியுள்ளாரோ அதன்கீழ் வகுப்பதன் மூலம் கிடைக்கக்கூடியது. அதாவது ஒருவர் 3 போட்டிகளில் விளையாடி மொத்தம் 100 ரன்களை எடுத்து, அதில் இரண்டு முறை மட்டும் அவுட்டாகியிருந்தால் அவரின் சராசரி 50 ஆகும். 

1 /7

7. ருதுராஜ் கெய்க்வாட்: இவர் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 583 ரன்களை குவித்துள்ளார், அதுவும் மூன்று முறை நான் அவுட்டாக இருந்துள்ளார். இவரின் பேட்டிங் சராசரி 53 ஆகும்.  

2 /7

6. எம்எஸ் தோனி: இவர் 11 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 161 ரன்களை அடித்துள்ளார், அதுவும் 8 முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார். இவரின் பேட்டிங் சராசரி 53.67 ஆகும்.  

3 /7

5. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்: இவர் 13 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 378 ரன்களை குவித்துள்ளார், அதில் 6 முறை நாட் அவுட்டாகும். இவரின் சராசரி 54 ஆகும்.     

4 /7

4. சஞ்சு சாம்சன்: இவர் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 504 ரன்களை குவித்துள்ளார், அதுவும் நான்கு முன் நாட் அவுட்டாக இருந்துள்ளார். இவரின் பேட்டிங் சராசரி 56 ஆகும். 

5 /7

3. ரியான் பராக்: இவர் 12 இன்னிங்ஸ்களில் விளையாடி 531 ரன்களை குவித்துள்ளார். அதுவும் 3 முறை நாட் அவுட்டாகவும் இருந்துள்ளார். இவரின் சராசரி 59 ஆகும்.   

6 /7

2. நிக்கோலஸ் பூரன்: இவர் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 499 ரன்களை குவித்துள்ளார். அதுவும் 6 முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார். இவரின் சராசரி 62.38 ஆகும்.   

7 /7

1. விராட் கோலி: இவர் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 708 ரன்களை குவித்துள்ளார், அதுவும் மூன்று முறை நாட் அவுட்டாகும். இவரின் சராசரி 64.36 ஆகும்.