தை 7 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று ஜனவரி 20ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /12

மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் குறையும். அரசால் அனுகூலம் ஏற்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடமைகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் தீர்ப்புகள் கிடைக்கும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம் அஸ்வினி :  சஞ்சலங்கள் குறையும். பரணி : கவனம் வேண்டும். கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.

2 /12

பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் பிறக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் கிருத்திகை : அனுகூலமான நாள். ரோகிணி :  எதிர்ப்புகள் குறையும். மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

3 /12

மற்றவர்களால் உங்களிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். செல்வச்சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மிருகசீரிஷம் : மாற்றமான நாள். திருவாதிரை : கவலைகள் குறையும். புனர்பூசம் : பொறுப்புகள் கிடைக்கும்.

4 /12

எதிர்பாராத சில விஷயங்கள் மூலம் மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். உத்தியோக பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான முயற்சிகள் அதிகரிக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மனதில் புதிய துறை சார்ந்த தேடல்கள் மேம்படும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம் புனர்பூசம் : தன்னம்பிக்கை உருவாகும். பூசம் : ஒத்துழைப்புகள் மேம்படும். ஆயில்யம் : தேடல்கள் மேம்படும்.

5 /12

கணவன், மனைவி இடையே இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். தவறி போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றம் ஏற்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபார பணிகளில் வரவுகள் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மகம் : வேறுபாடுகள் குறையும். பூரம் : அங்கீகாரம் கிடைக்கும். உத்திரம் : வரவுகள் அதிகரிக்கும்.

6 /12

முகத்தில் புதிய பொலிவுகள் உண்டாகும். ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பல பணிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்கவும். சமூகப் பணிகளில் கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்த தன்மைகள் விலகும். மற்றவரிடம் எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை :  தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் உத்திரம் : பொலிவுகள் உண்டாகும். அஸ்தம் : பொறுமை வேண்டும். சித்திரை :  உதவிகள் கிடைக்கும்.

7 /12

கணவன் மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வேள்விப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் சித்திரை : அனுசரித்துச் செல்லவும். சுவாதி : கவனம் வேண்டும் விசாகம் : தெளிவான நாள்.

8 /12

சாமர்த்தியமான பேச்சுக்கள் மூலம் இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும், அமைதியும் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கல் விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் விசாகம் : இழுபறியான நாள். அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும். கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

9 /12

அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். அரசுப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் சிறு அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். இரக்கம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை :  வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மூலம் :  ஒத்துழைப்புகள் கிடைக்கும். பூராடம் : ஆதாயகரமான நாள். உத்திராடம் :  முடிவுகள் பிறக்கும்.

10 /12

மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். கௌரவப் பொறுப்புகள் மூலம் ஆதரவுகள் மேம்படும். பாகப்பிரிவினை முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும் அன்யோன்யமும் மேம்படும். உத்யோக ரீதியான செயல்பாடுகளில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நற்செயல் நிறைவேறும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் உத்திராடம் : தேடல்கள் உண்டாகும். திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அவிட்டம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

11 /12

இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வேலை பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம் அவிட்டம் : பணிகளில் கவனம் சதயம் : தயக்கங்கள் நீங்கும். பூரட்டாதி : போட்டிகள் மேம்படும்.

12 /12

பணி சார்ந்த விஷயங்களில் முயற்சிக்கு ஏற்ப புதிய சூழல் ஏற்படும். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கங்கள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் :  இளஞ்சிவப்பு நிறம் பூரட்டாதி :  சாதகமான நாள். உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும். ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.