சலார் 2 முதல் கல்கி 2 வரை! 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் பிரபாஸ் படங்கள்!

பான் இந்திய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ், அவருடைய தொழில் சார் வாழ்க்கையில் புதிய உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது பிறந்த நாளை நடிகராக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் கொண்டாடுகிறார்கள். 

 

1 /6

முதல் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸின் நடிப்பில் வெளியான 'பாகுபலி', 'சலார்', 'கல்கி 2898 கிபி' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்திய சினிமாவில் மறுக்க இயலாத சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் பற்றி பார்ப்போம்.

2 /6

கல்கி 2  'கல்கி 2898 கிபி' திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

3 /6

'சலார் 2' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ஹை- வோல்டேஜ் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படம் இது. இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

4 /6

The Raja Saab இந்த திரைப்படம் - இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் காதலும் காமெடியும் கலந்த திகில் படமாகும். இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரபாஸுடன் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

5 /6

இயக்குநர் ஹனு ராகவ புடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம்- 1940 ஆம் ஆண்டுகளில் பின்னணியில் சரித்திர புனைவு கதையாக தயாராகிறது. இந்தத் திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மேற்கொள்கிறார். 

6 /6

ஸ்பிரிட் இந்தி சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக 'ஸ்பிரிட்' இருக்கிறது. இந்தப் படத்தில் முதன்முறையாக பிரபாஸ் - பரபரப்பிற்கு பெயர் பெற்ற இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்திருக்கிறார்.