ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம்.
ஆர்சிபி அணி இப்போது புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. ஏறத்தாழ பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு அந்த அணிக்கு மங்கிவிட்டாலும், ஒரு சில அதிசயங்கள் நடத்தால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஆர்சிபி இனி விளையாட போகும் 6 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்போது அவர்கள் 14 புள்ளிகளை பெறுவார்கள். அதேநேரத்தில், ராஜஸ்தான் கொல்கத்தா, சன்ரைசஸ் ஆகிய அணிகள் முடிவுகள் ஆர்சிபி அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். அதாவது ராஜஸ்தான் ஒரு போட்டியில் கூட வெல்லக்கூடாது.
எஞ்சியிருக்கும் கேகேஆர், எஸ்ஆர்ஹெச் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தலா இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற வேண்டும். சிஎஸ்கே அணியும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற வேண்டும்.
இப்படியொரு சம்பவம் நடந்தால் எல்லா அணிக்களும் தலா 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் மட்டுமே பெற்றிருப்பார்கள். அப்போது ரன்ரேட் அடிப்படையில் எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பதை தீர்மானிக்கப்படும்.
இது ஆர்சிபி அணிக்கு சாதகமான விஷயமாகும். ஏனென்றால் இப்போது ரன்ரேட்டில் மைனஸில் இருக்கும் ஆர்சிபி, தொடர்ச்சியாக வெற்றி பெறும்போது அந்த அணியின் ரன்ரேட் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தும்போது ஈஸியாக பிளே ஆப் சுற்றுக்கு சென்றுவிட முடியும்.
இது ஒரு அபூர்மான கற்பனையாக கூட தெரியலாம். ஆனால், இது நடக்காது என்று சொல்ல முடியாது என்பதால் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான இப்படியும் ஒரு வாய்ப்பு இருப்பதை ஆர்சிபி ரசிகர்கள் மலையாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.