BSNL ரீசார்ஜ் பிளான்: மலிவு விலை, இலவச கால்கள், வரம்பற்ற தரவு, முழு விவரம் உள்ளே

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

வாடிக்கையாளர்கள் ஜூலை 8 வரை இந்த திட்டத்தின் பயன்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். 398 ரூபாய்க்கான இந்த திட்டத்தை BSNL ஜனவரி மாத தொடக்கத்தில் விளம்பர அடிப்படையில் அறிமுகப்படுத்தியது.

1 /5

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 398 ரூபாய்க்கான இந்த திட்டத்தை BSNL ஜனவரி மாத தொடக்கத்தில் விளம்பர அடிப்படையில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கடைசி தேதி ஏப்ரல் 9 என்று வைக்கப்பட்டது, ஆனால் இப்போது BSNL அதை 90 நாட்கள் நீட்டித்துள்ளது.  

2 /5

BSNL தனது சந்தாதாரர்களுக்கு, ரூ .398 சிறப்பு கட்டண வவுச்சரை (STV) அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் நீட்டிப்புக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் ஜூலை 8 வரை இந்த திட்டத்தின் பயன்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். 

3 /5

டெலிகாம் டாக்கின் அறிக்கையின்படி, BSNL இந்த ரீசார்ஜ் திட்டத்தை ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. BSNL-லின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற தரவு, இலவச குரல் அழைப்பு மற்றும் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் வசதி போன்ற பல நன்மைகளைப் பெறுவார்கள்.  

4 /5

ஜனவரியில், இந்தத் திட்டம் சென்னை மற்றும் ஹரியானா வட்டாரங்களுக்காக மட்டும் துவக்கப்பட்டது. ஆனால் இப்போது BSNL-லின் இந்த ரீசார்ஜ் திட்டம் நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

5 /5

இந்த திட்டத்தில் முன்பு கிடைத்த அதே நன்மைகள் இப்போது, அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.  BSNL-லின் ரூ .398 ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் கால அளவு 30 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், வேக வரம்பு இல்லாமல், இதில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற தரவு கிடைக்கும். BSNL-லின் இந்த திட்டம் ஏப்ரல் 10 முதல் நாடு முழுவதும் கிடைக்கத் துவங்கியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப நாட்களுக்கு, இந்த திட்டம் 90 நாட்களுக்கு இருக்கும்.