இந்தியாவில் இரண்டு சிம் கார்களை ஒரே மொபைலில் பயன்படுத்தி வந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு பயனர் இரண்டு சிம் கார்டுகளை வைத்திருந்தால் பணம் செலுத்த வேண்டுமா என்ற சந்தேகத்திற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளித்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் நபர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இருப்பினும் இதனை TRAI மறுத்துள்ளது.
கடந்த 2022ல் தொலைத்தொடர்புத்துறை நிறுவனங்கள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியாக TRAI தெரிவித்துள்ளது. தேசிய எண் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி கேட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் பிறகு தேசிய எண்ணிடுதல் திட்டத்தில் (NNP) புதிய திருத்தங்களை TRAI வெளியிட்டது. தொலைத்தொடர்புயின் பயன்பாட்டை பாதிக்கும் அனைத்து அம்சங்களையும் மதிப்பிடுவதே இதன் நோக்கம் ஆகும்.
தற்போது நடைமுறையில் இருக்கும் சில திட்டங்கள் மற்றும் எதிர்கால தேவைகளுக்கான வளங்களை உறுதி செய்வததே இதன் குறிக்கோள் என்று TRAI தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் வைத்திருப்பவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்ற தகவல் பொய் என்று TRAI திட்டவட்டவமாக மறுத்துள்ளது.