இந்த 5 பரிவர்த்தனைகளை செய்யாதீர்கள்! உன்னிப்பாகக் கண்காணிக்கும் வருமான வரித்துறை

Income Tax News In Tamil: வருமான வரித் துறை சில பரிவர்த்தனைகளை அடையாளம் கண்டுள்ளது. அதில் துறை சிறப்பு கவனம் செலுத்துகிறது. குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பண பரிவர்த்தனைகள் குறித்து தெரிவிக்க வேண்டியது அவசியம்.

Income Tax Department Notice News: வருமான வரிச் சட்டத்தின் கீழ் பரிவர்த்தனை மேற்கொண்டாலும் தொடர்ந்து உங்கள் வங்கி கணக்கை வருமான வரித் துறை உன்னிப்பாகக் கண்காணித்து வரும். எந்தெந்த பரிவர்த்தனை? எவ்வளவு பணம் டெபாசிட் செய்தால்? சிக்கல் ஏற்படும் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

1 /9

ஒரு வருடத்தில் இந்த ஐந்து பரிவர்த்தனைகளை ஒருபோதும் செய்யாதீர்கள்!

2 /9

வருமான வரியைச் சேமிக்கும் செயல்பாட்டில் சிலர் தவறு செய்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வருமான வரிச் சட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகளைச் செய்யுங்கள். இது உங்களை ஒருபோதும் சிக்கலில் சிக்க வைக்காது.

3 /9

உங்களுடைய அதிக பணப் பரிவர்த்தனைகளை வருமான வரித் துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. நீங்கள் எந்தவொரு பணப் பரிவர்த்தனையையும் செய்தவுடன், நீங்கள் உடனடியாக வருமான வரியின் ரேடாரின் கீழ் வருவீர்கள். இதற்குப் பிறகு, தப்பிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே வாருங்கள் சில பரிவர்த்தனைகளைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம் அதன் மூலம் உங்களுக்கு சிக்கல் ஏற்படாது. 

4 /9

வங்கிகள், பரஸ்பர நிதிகள், புரோக்கரேஜ் நிறுவனங்கள் மற்றும் சொத்து தொடர்பான பரிவர்த்தனை செய்யும் போது நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பண பரிவர்த்தனைகளைச் செய்தால், அவர்கள் வருமான வரித் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற சில பரிவர்த்தனைகள் பற்றி பார்ப்போம்.

5 /9

நீங்கள் ஒரு வருடத்தில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் நிலையான வைப்புத்தொகையில் (FD) டெபாசிட் செய்தால். அத்தகைய சூழ்நிலையில், வருமான வரித் துறையிடமிருந்து உங்களுக்கு ஒரு நோட்டீஸ் வரலாம். அது ஒரே நேரத்தில் டெபாசிட் செய்யப்பட்டதா? பல முறை டெபாசிட் செய்யப்பட்டதா? அது பண பரிவர்த்தனையா? டிஜிட்டல் பரிவர்த்தனையா? போன்ற கேள்விகள் கேட்டு உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம். எனவே FD-யில் உள்ள பெரும்பாலான பணம் காசோலை மூலம் டெபாசிட் செய்யப்பட வேண்டும். ஒரு நிதியாண்டில் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டால், வங்கிகள் அதைப் பற்றி CBDT-க்குத் தெரிவிக்க வேண்டும்.

6 /9

ஒரு நிதியாண்டில் ஒரு வங்கி அல்லது கூட்டுறவு வங்கியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை டெபாசிட் செய்தால், வங்கி அல்லது கூட்டுறவு வங்கி வருமான வரித் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று CBDT ஒரு விதியை உருவாக்கியுள்ளது. எனவே பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமான தொகையை நீங்கள் டெபாசிட் செய்தால், வருமான வரித் துறை கேள்வி கேட்கலாம்.

7 /9

ஒரு நபர் ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்தை வாங்கினால் அல்லது விற்றால், அத்தகைய சூழ்நிலையில், சொத்து பதிவாளர் அதன் தகவலை வருமான வரி அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், இவ்வளவு பெரிய பரிவர்த்தனைக்கு (அதிக மதிப்பு பரிவர்த்தனை) பணம் எங்கிருந்து கிடைத்தது உட்பட பல தகவல்களை வருமான வரித் துறை உங்களிடம் கேள்வி கேட்கலாம்?

8 /9

நீங்கள் பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் மற்றும் பத்திரங்களில் பெரிய பண பரிவர்த்தனைகளைச் செய்தால், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். ஒரு நபர் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் மற்றும் பத்திரங்களை வாங்கினால், நிறுவனங்கள் அதன் தகவலை வருமான வரித் துறையிடம் கொடுக்க வேண்டும்.

9 /9

உங்கள் கிரெடிட் கார்டு பி‌ல் ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்தால், அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த பில்லை ஒரே நேரத்தில் ரொக்கமாக செலுத்துகிறீர்கள் என்றால், அப்போதும் கூட உங்களுக்கு வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வரலாம். மறுபுறம், நீங்கள் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான கிரெடிட் கார்டு பில்லை ரொக்கமாக செலுத்தினால், பணத்தின் ஆதாரம் குறித்து உங்களிடம் கேட்கப்படலாம். நீங்கள் இதுபோன்ற பரிவர்த்தனை செய்திருந்தால், உங்கள் வருமான வரி வருமானத்தில் அதைப் பற்றிய தகவலை கொடுக்க வேண்டும்.