புதன் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின் படி, மார்ச் 31, 2023 அன்று, கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம் மீனத்தை விட்டு மேஷ ராசியில் நுழையப் போகிறார். புதன் வலுவிழந்த நிலையில், அதாவது நீச்சத்தில் மீன ராசியில் இருந்து வெளியேறி செவ்வாயின் ராசியான மேஷ ராசிக்கு மாறப் போகிறார்.
புதனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தென்படும். இருப்பினும் புதனின் இந்த மாற்றத்தால் 5 ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அனைவருடனும் நன்றாக பழகும் வாய்ப்பு கிடைக்கும். வங்கி மற்றும் ஊடகத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கடக ராசிக்கு பணியிடத்தில் பணி பாராட்டப்படுவதோடு மட்டுமல்லாமல், புதிய பொறுப்புகளும் வழங்கப்படும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் தாயின் உடல்நிலை நன்றாக இருக்கும்.
இந்த காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலை மாறுவதற்கு இந்த நேரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இப்பணியில் முழு வெற்றி பெறுவீர்கள்.
துலா ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரத்தால் உருவாகும் விபரீத ராஜயோகம் பண ஆதாயத்தைத் தரும். வருமானம் அதிகரிக்கும். சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.
மீன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வணிக வகுப்பினருக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். மறுபுறம், நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமானது.