குரு பகவான் தனது ராசியை சுமார் 13 மாதங்களில் ஒரு மாற்றிக் கொள்கிறார். கடந்த 2024 மே 01ம் தேதி, குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியானார். இந்நிலையில், குருபகவான் 2024 அக்டோபர் 9ம்m தேதி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்ல, வக்ர பெயர்ச்சி, நேவக்ர நிவர்த்த, அஸ்தனமன் உதயம் ஆகியவையும் ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மற்றும் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கம் ஏற்படுகிறது.
குரு பகவான்: சில கிரகங்கள் தங்கள் ராசியை மிக விரைவாக மாற்றிக் கொள்ளும். சில ராசிகள் சில வருடங்கள் ஒரே ராசியில் இருக்கும். ஜோதிடத்தில், குரு பகவான் என அழைக்கப்படும் வியாழன் ஒரு வருடத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார்.
குரு வக்ர பெயர்ச்சி: அறிவு, மகிழ்ச்சி, கல்வி, திருமணம் மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக இருக்கும் குரு பகவான், அக்டோபர் 9, 2024 அன்று வக்ர நிலையை அடைவார். தற்போது ரிஷப ராசியில் இருக்கும் குரு பகவான், 2025 ஆம் ஆண்டு மிதுன ராசிக்கு பெயர்ச்சியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
குரு பகவான், அக்டோபர் 9, 2024 அன்று வக்ர பெயர்ச்சி அடையும் நிலையில், 2025 பிப்ரவரி 4ம் தேதி வக்ர நிவர்த்தி அட்டைவார். குருவின் வக்ர நிலையினால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
மிதுனம்: குருவின் வக்ர நிலையினால் மிதுன ராசிகள் நல்ல பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.
கடகம்: குருவின் வக்ர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். கணிசமான நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
தனுசு: குருவின் வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு வரம் எனலாம். நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும். வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பு மரியாதை உயரும்.
குருவின் நட்சத்திர பெயர்ச்சி: தற்போது ரிஷப ராயில் சஞ்சரித்து வரும் குரு பகவான் கடந்த ஜூன் 13ம் தேதி, குரு ரோகிணி நடசத்திரத்தில் பெயர்ச்சியானார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் நீடிப்பார். ஜோதிடத்தில் இந்த நட்சத்திர மாற்றம் மிகவும் நல்ல நிகழ்வாக கருதப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.