மெதுவாக சாப்பிட்டால் நல்லதா? அல்லது வேகமாக சாப்பிட்டால் நல்லதா?

மெதுவாக சாப்பிடுவது நல்லதா, வேகமாக சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சாப்பிடுவதில் கூட கவனமாக இருந்தால் நீங்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை தவிர்க்கலாம். சாப்பிடுவது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் கேசி மீன்ஸ் கூறியுள்ள அறிவுரையை கேளுங்கள். 

1 /6

சாப்பிடும்போது மெதுவாகவும், வேகமாகவும் சாப்பிட்டால் வரக்கூடிய பிரச்சனைகள் குறித்து பிரபல ஊட்டசத்து நிபுணர் கேசி மீன்ஸ் தெரிவித்துள்ள விளக்கத்தை பார்க்கலாம். அவர் மெதுவாக சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும், வேகமாக சாப்பிட்டால் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.   

2 /6

வேகமாக சாப்பிடுபவர்களை விட மெதுவாக சாப்பிடுபவர்களுக்கு வளர்சிதை மாற்ற நோய்க்குறி உருவாகும் வாய்ப்பு நான்கு மடங்கு குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி தெளிவாகக் கண்டறிந்துள்ளது என்று டாக்டர் மீன்ஸ் தெரிவித்துள்ளார். அதாவது என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் மட்டுமல்ல, எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது. 

3 /6

உணவுமுறைகளை மாற்ற முடியாதபோது, குறைந்தபட்சம் சாப்பிடும் வேகத்தையாவது மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார் அவர். 2018 ஆம் ஆண்டு BMJ Open-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மெதுவாக சாப்பிடுவது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கும். இடுப்பு அளவையும் குறைக்கும் என்பதைக் காட்டுகிறது. 

4 /6

மெதுவாக சாப்பிடுவதுடன், இரவு உணவிற்குப் பிறகு சிற்றுண்டிகளைத் தவிர்த்தல் மற்றும் படுக்கைக்கு 2 மணி நேரத்திற்குள் சாப்பிடாமல் இருப்பது எடையைக் குறைக்க உதவும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

5 /6

இந்த ஆய்வு ஜப்பானில் உள்ள 60,000 பேரின் உடல்நலக் காப்பீட்டுத் தரவை ஆய்வு செய்தது, உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் உடல் பருமன், உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) மற்றும் இடுப்பு அளவு ஆகியவற்றைப் பாதிக்கலாம் என்பதைக் கண்டறிந்தது.   

6 /6

வேகமாக சாப்பிடுவது குளுக்கோஸ் சகிப்புத்தன்மையைக் குறைத்து இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர், அதே நேரத்தில் மெதுவாக சாப்பிடுவது ஒரு நபரை விரைவில் ஒருவரை நிறைவாக உணர வைக்கிறது. இதனால் கலோரி உட்கொள்ளல் குறைகிறது.