முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரோஹித், கம்பீர் எடுத்த முக்கிய முடிவு!

நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய டிரஸ்ஸிங் ரூமில் ரோஹித் ஷர்மா, கம்பீர், அபிஷேக் நாயர் இடையே நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றுள்ளது.

 

1 /7

நியூசிலாந்து அணியுடன் முதல் டெஸ்டில் தோல்விக்கு பிறகு சொந்த மண்ணில் இந்தியாவின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்விக்கு பிறகு தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றது. பெங்களூரில் நடந்த முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அப்போதே இந்தியாவின் தோல்வி உறுதியானது.   

2 /7

இருப்பினும் இரண்டாவது டெஸ்டில் சர்ஃபராஸ் கான்-ரிஷப் பந்த் கூட்டணி அணியை மோசமான சரிவில் இருந்து மீட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்கள் அடித்தது இந்தியா.  

3 /7

இருப்பினும் 5வது நாளில் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்களை எடுத்தாலும் தோல்வியை தழுவியது இந்தியா. நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  

4 /7

இந்த வெற்றி மூலம் 36 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து இந்தியாவில் வெற்றியை பதிவு செய்துள்ளது.  இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

5 /7

இந்த தோல்வியை தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் இடையே நீண்ட விவாதம் நடைபெற்றுள்ளது.  

6 /7

2வது டெஸ்ட் போட்டி அடுத்த வாரம் புனேயில் நடைபெற உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த போதிலும் அடுத்த 4 டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்று வென்றது இந்தியா.  

7 /7

"நியூசிலாந்து மிகவும் சிறப்பாக பந்துவீசியது. அதற்கு நாங்கள் பதிலளிக்கத் தவறிவிட்டோம். இதற்கு முன்பு இதுபோன்ற சூழ்நிலையில் இருந்துள்ளோம். எங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் என்ன தேவை என்பது எங்களுக்கு தெரியும்" என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.