IND vs NZ: நன்றாக விளையாடியும் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை!

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் சில வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

 

1 /6

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்துக்கு அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

2 /6

முகேஷ் குமார் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வந்த முகேஷ் குமார் சமீபத்தில் அணியில் வாய்ப்புக்காக காத்து கொண்டு இருக்கிறார். இந்தியாவுக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கும் நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

3 /6

யாஷ் தயாள் இளம் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் பங்களாதேஷ் தொடரில் அணியில் இருந்தார். இருப்பினும் அவர் பிளேயிங் 11ல் விளையாடவில்லை. தற்போது நியூசிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

4 /6

ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு இந்திய அணியில் இடம் பெற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். துலீப் டிராபியில் 2 அரைசதம் அடித்த போதிலும், நியூசிலாந்துக்கு தொடரில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

5 /6

அஜிங்க்யா ரஹானே இந்த டெஸ்ட் தொடரிலும் அஜிங்க்யா ரஹானே இடம் பெற முடியவில்லை. மும்பை அணி மற்றும் கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

6 /6

அபிமன்யு ஈஸ்வரன் உள்நாட்டு கிரிக்கெட்டில் அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனாலும் அவருக்கு நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. துலீப் டிராபி மற்றும் இரானி கோப்பை இரண்டிலும் அதிக ரன்கள் எடுத்தார் ஈஸ்வரன்.