Bank Alert | ஸ்டேட் பேங்க், கனரா பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Bank Latest News: வங்கி வாடிக்கையாளர்களே உங்களுக்கான மூன்று முக்கிய அறிவிப்புகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கனரா பேங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் வெளியிட்டு இருக்கிறது.

Bank Customer Alert: ஸ்டேட் பேங்க், கனரா பேங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் அமலுக்கு வரக்கூடிய மூன்று புதிய மாற்றங்கள் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? வங்கி வாடிக்கையாளர்கள் செய்யவேண்டியவை குறித்து விவரங்களை பார்ப்போம்.

1 /13

உங்களுக்கு ஸ்டேட் பேங்க், கனரா பேங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற வங்கிகளில் பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களாக இருந்தால், இன்று (பிப்ரவரி 14) முதல் அமலுக்கு வரக்கூடிய மூன்று புதிய மாற்றங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.

2 /13

வங்கிகள் தரப்பில் இருந்து கண்டிப்பாக இந்த விஷயங்கள் உடனடியாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஸ்டேட் பேங்க், கனரா பேங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் போட்ட உத்தரவு என்ன? அதன் விவரங்கள் குறித்து முழுமையாக பார்ப்போம்.

3 /13

பொதுவாக நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும், தங்கள் வங்கிகளின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் விதிகளை இந்திய ரிசர்வ் பேங்க் பாலிசிக்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றி அமைக்கிறது. அப்படி மாற்றி அமைக்கக்கூடிய அந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் எப்பொழுது இருந்து நடைமுறைக்கு வரும்? அது யாருக்கெல்லாம் பொருத்தும்? போன்ற அனைத்து விவரங்களும் வங்கிகள் தங்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

4 /13

அந்த வகையில தற்பொழுது இந்தியாவின் முக்கியமான வங்கிகளில் ஒன்றாக இருக்கக்கூடிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கனரா பேங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.

5 /13

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கனரா பேங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்களுக்கான அனைத்து அறிவிப்பும் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

6 /13

முதலில் மிக முக்கிய அறிவிப்பான வங்கி மினிமம் பேலன்ஸ் குறித்து பார்ப்போம். இந்த மினிமம் பேலன்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது என சொல்லலாம். ஏனென்றால் பேங்க் அக்கவுண்ட் மெயின்டைன் செய்வதே பாமர மக்களுக்கு சிரமமாக இருக்கிறது. இதில் வங்கி அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் அமௌன்ட் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும், தவறும்பட்சத்தில் பெனால்டி, வரி என பல்வேறு விஷயங்களால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது மினிமம் பேலன்ஸ் மேலும் சிக்கல்களை உருவாக்க உள்ளது.

7 /13

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை பொறுத்தவரை நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் தொகையை 3000 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரைக்கும் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அர்ப்பன் பிரான்சஸ் கிளைகளில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மினிமம் பேலன்ஸ் ₹5000 கண்டிப்பா மெயின்டைன் பண்ண வேண்டும். மினிமம் பேலன்ஸ் என்பது மன்த்லி ஆவரேஜ் பேலன்ஸ் எனக்கூறுவார்கள்.

8 /13

கனரா வங்கி பொறுத்தவரைக்கும் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் மினிமம் பேலன்ஸ் என்பது 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

9 /13

அதேபோல பிஎன்பி என சொல்லக்கூடிய பஞ்சாப் நேஷனல் பேங்க் கிளைகளில் அக்கவுண்ட்  வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் மினிமம் பேலன்ஸ் ஆனது 1000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

10 /13

இந்த மூன்று வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருந்தால் மினிமம் பேலன்ஸ் மெயின்டைன் பண்ணாமல் இருந்தால், கண்டிப்பாக பெனால்டி விதிக்கப்படும் என வங்கிகள் எச்சரித்துள்ளனர்.

11 /13

இரண்டாவது முக்கியமான விசியம் என்ன வென்றால், ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது தொடர்பான புதிய மாற்றங்கள். அதாவது மெட்ரோ நகரங்களை பொறுத்தவரைக்கும் மூன்று இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் செய்துக்கொள்ளலாம். அதற்கு மேல் நீங்கள் ஏடிஎம் மூலம் எடுக்கக்கூடிய ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹25 முதல் ₹30 வரைக்கும் ஒவ்வொரு வங்கிகளுக்கு தகுந்த மாதிரி வசூலிக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இந்த கட்டணம் இதற்கு முன்னதாக ₹20 என இருந்தது குறிப்பிடத்தக்கது.

12 /13

மூன்றாவது முக்கியமான விசியம் என்ன வென்றால், இன்ட்ரஸ்ட் ரேட் தொடர்பானது. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் 0.25% புள்ளிகள் குறைத்து அறிவிப்பை வெளியிட்டார்கள். இதன் விளைவாக இஎம்ஐ (EMI) கடன்களுக்கான இன்ட்ரஸ்ட் ரேட்டானது குறைந்தது.

13 /13

ரெப்போ ரேட் குறைக்கப்பட்டதால், வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை. ரெப்போ ரேட் அடிப்படையில் ஒவ்வொரு வங்கிகளும் தங்களுடைய பேசிக் CLR ரேட்டுக்கு தகுந்த மாதிரி பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டியை குறைப்பார்கள். எனவே உங்களுடைய வங்கியின் அபிஷியல் வெப்சைட் மூலமாகவோ அல்லது நேரடியாக வங்கி கிளைக்கு சென்று பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான இன்ட்ரஸ்ட் ரேட் எவ்வளவு எனக் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்