Carrot Health Benefits: கேரட்டை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
எதுவும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சு என்பதால், அளவோடு சாப்பிட வேண்டும். நன்மை என்பதால் அளவில்லாமல் சாப்பிடுவது உடல்நலக் கேடையும் ஏற்படுத்தலாம்.
கேரட்டில் வைட்டமிண் ஏ, சி,கே மற்றும் பொட்டாஸியம் மற்றும் ஃபைபர் ஆகியவை உள்ளது.
கேரட்டில் ஃபைபர் அதிகம் இருக்கிறது. இது செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.
கேரட்டை தினமும் சாப்பிட்டு வருவதால் அதில் இருக்கும் ஃபைபர், போட்டாஸியம் மூலம் கொலஸ்ட்ரால் அளவு குறையும். இது இதய நோய் வருவதை தடுக்கும்.
கேரட் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது, சாப்பிடாவிட்டால் கேரட்டுக்கு நல்லது என விதண்டாவாதம் பேசாமல் கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சிறப்பாக இருக்கும். இதில் உயர் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது உடலில் வைட்டமிண் ஏ ஆக மாற்றமடையும். வைட்டமிண் ஏ நல்ல கண்பார்வையை தரும்.
இதில் இயற்கையாகவே இனிப்பு உள்ளது. மேலும், இதில் Low Glycemic Index உள்ளதால் ரத்த சர்க்கரை அளவு உயராது.
கேரட்டில் கலோரிகளும் குறைவு. ஃபைபரும் அதிகம். இது உடல் எடையை குறைப்போருக்கு சிறந்த உணவாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இது கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறவும். Zee News இதனை உறுதிப்படுத்தவில்லை.