பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆர்சி புத்தகம், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆயுள் காப்பீட்டு சான்றிதழ் போன்ற முக்கியமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வாட்ஸ் அப்பில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
உங்கள் மொபைலில் +91-9013151515 என்ற எண்ணை சேமித்து வைத்து 'DigiLocker' என்று டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.
இப்போது உங்கள் டிஜிலாக்கர் கணக்கை உருவாக்கி அங்கீகரிப்பதற்கும், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்இ மதிப்பெண் சான்றிதழ்கள், ஆர்சி போன்ற ஆவணங்களைப் டவுன்லோடு செய்வதற்கான ஆப்ஷன் உங்களுக்கு வழங்கப்படும் .
டிஜிலாக்கர் செயலி மற்றும் இணையதளம் செயல்படுவதை போலவே, இதில் சரிபார்ப்பிற்காக உங்கள் ஆதார் எண்ணைச் சேர்க்கும்படி கேட்கப்படும்.
ஆதார் எண்ணை உள்ளிட்டதும், ஓடிபி உதவியுடன் சாட்பாட் அதை சரிபார்க்கும். இப்போது உங்களது அனைத்து ஆவணங்களும் வாட்ஸ்அப்பில் டவுன்லோடு செய்யப்படும்.