Rashtrapati Bhavan: குடியரசுத் தலைவர் மாளிகை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

திரௌபதி முர்மு 15வது ஜனாதிபதியாக பதவி ஏற்ற நிலையில், தலைநகர் புதுதில்லியில் உள்ள ரெய்சினா ஹில்ஸில் கட்டப்பட்டுள்ள ராஷ்டிரபதி பவன் என்னும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இனி தங்குவார். இந்த குடியரசுத் தலைவர் மாளிகை வரலாறு பல நூறு ஆண்டுகள் பழமையானது. ராஷ்டிரபதி பவனின் கட்டுமானம் 1912 இல் தொடங்கியது. இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 19 ஆண்டுகள் ஆனது. ராஷ்டிரபதி பவனில் உள்ள அனைத்தும் தனித்துவமானது; வரலாற்று சிறப்புமிக்கது. இந்த கட்டிடம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

1 /5

முன்னதாக ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவை நாட்டின் தலைநகராக வைத்திருந்தனர். ஆனால் 1911ம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் தலைநகரை டெல்லிக்கு மாற்றினர். இதற்குப் பிறகு, 1912ம் ஆண்டில், ரைசினா ஹில்ஸில் ராஷ்டிரபதி பவனின் வேலை தொடங்கியது. முன்னதாக அதன் கட்டுமான வரம்பு 4 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 1914ம் ஆண்டில் முதல் உலகப் போர் தொடங்கியது. எனவே தாமதம் காரணமாக, 19 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1931 ஜனவரி 23 அன்று, கட்டிடம் கட்டும் பணி முடிந்தது.  

2 /5

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தக் கட்டிடம் வைஸ்ராய் மாளிகை என்று அழைக்கப்பட்டது. இது பிரிட்டிஷ் பேரரசின் வைஸ்ராய்க்காக கட்டப்பட்டது. ஆனால் 1947 ஆகஸ்ட் 15 அன்று நாடு சுதந்திரம் அடைந்தபோது அதற்கு ராஜ் பவன் என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்குப் பிறகு, நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் காலத்தில், அதன் பெயர் ராஷ்டிரபதி பவன் ஆனது.

3 /5

ராஷ்டிரபதி பவனில் வசித்த முதல் நபர் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அல்ல. அதில் அவசித்த முதல் நபர் சி.ராஜகோபாலாச்சாரி. டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1950 ஜனவரி 26 அன்று நாட்டின் முதல் ஜனாதிபதியானார். ஆனால் சி.ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக 21 ஜூன் 1948 இல் பதவியேற்றார். அப்போது ராஷ்டிரபதி பவன் ராஜ்பவனாக இருந்தது. அவர் ராஷ்டிரபதி பவனின் மையக் கோபுரத்தின் கீழ் பதவியேற்றார்.

4 /5

ராஷ்டிரபதி பவனில் வசித்த முதல் இந்தியர் சி.ராஜகோபாலாச்சாரி ஆவார். ஆனால் அவர் வைஸ்ராயாக அரச அறையில் தங்கவில்லை. இந்த கட்டிடத்தின் பெரிய அறைகள் அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் அப்போதைய விருந்தினர் மாளிகையின் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தார். இந்த அறை இப்போது ராஷ்டிரபதி பவனின் குடும்பப் பிரிவு என்று அழைக்கப்படுகிறது.

5 /5

சி.ராஜகோபாலாச்சாரியார் தொடங்கிய பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. சி.ராஜகோபாலாச்சாரிக்குப் பிறகு, முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உட்பட இந்தக் கட்டிடத்திற்கு வந்த குடியரசுத் தலைவர்கள் அனைவரும் வைஸ்ராயின் சொகுசு அறைக்குப் பதிலாக இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வாழ்ந்த அதே அறையைத் தேர்ந்தெடுத்தனர். சிறிது நேரத்தில் வைஸ்ராயின் அறை விருந்தினர்களுகான அறையாக மாற்றப்பட்டது. இப்போது மற்ற நாடுகளின் அரச தலைவர்களும் அவர்களது பிரதிநிதிகளும் இங்கு செயல்படுகின்றனர்.