Pumpkin | பூசணிக்காய் இலைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மாதவிடாய், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Pumpkin Leaves : பூசணிக்காய் இலையில் இருக்கும் சத்துகளை இதுவரை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் இங்கே அறிந்து கொள்ளுங்கள். மாதவிடாய் முதல் மலச்சிக்கல் வரையிலான பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கிறது.
பூசணிக்காய், இந்தியா முழுவதும் அறியப்பட்டிருக்ககூடிய மிகவும் பிரபலமான காய்கறி, பல மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. ஆனால் அதன் இலைகளும் மனித உடலுக்கு மிகவும் நல்லது என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. குறிப்பாக, பெண்களின் பல பிரச்சனைகளுக்கான சிறந்த இயற்கை நிவாரணியாக பூசணி இலைகள் உள்ளன.
பூசணி இலைகளின் முக்கிய ஊட்டச்சத்துக்கள் | பூசணி இலைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இதில் கல்சியம், மாங்கனீசு, வைட்டமின் பி6, பாஸ்பரஸ் மற்றும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு | மாதவிடாய்க்கு முன் பெண்கள் அனுபவிக்கும் மனநிலை மாற்றங்கள், தலைவலி, சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் மிகவும் பரவலாக உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு பூசணி இலைகளில் உள்ள மாங்கனீசு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது, பெண்களின் உடலில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களை சமநிலை படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும்.
மலச்சிக்கலுக்கும் எலும்பு வலிக்குமான தீர்வு | பூசணி இலைகளில் நிறைந்த நார்ச்சத்து, மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும். இதேபோல், பூசணி இலைகளில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், எலும்புகள் மற்றும் மூட்டுகளை பலப்படுத்த உதவுகிறது. இதனால், பல் வளர்ச்சி மற்றும் எலும்பு வலிகளுக்கும் நல்ல பலன்களை தருகிறது.
இரத்தக் குறைபாட்டுக்கு தீர்வு | பூசணி இலைகளில் உள்ள இரும்புச்சத்து, இரத்தம் குறைவதற்கான தீர்வாக இருக்கிறது. இது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்த குறைபாட்டையும் சரி செய்ய உதவுகிறது. இதன் மூலம், பெண்கள் தங்கள் உடலின் இரத்த அளவை இயற்கையாக மேம்படுத்த முடியும்.
உடலின் கொழுப்பு அளவை குறைக்கும் | பூசணி இலைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்பை உறிஞ்சுவதைக் குறைத்து, இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது, செரிமானத்தை சிறப்பாக மேம்படுத்தி, உடலில் உள்ள அதிக கொழுப்பை கரைத்துவிட உதவுகிறது.
பூசணி இலைக் குழம்பு: பூசணி இலைகளை குழம்பில் சேர்த்து சாப்பிடுங்கள். இது, மலச்சிக்கல் மற்றும் எலும்பு வலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பூசணி இலைகளை நறுக்கி, அதிலிருந்து சாறு எடுத்து தினசரி குடிக்கலாம். இது, இரத்தக் குறைபாட்டையும் நீக்குகிறது.
பருப்புடன் பூசணி இலைகளை சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம். இது உடலின் சீரான சிகிச்சைக்கு உதவுகிறது. பூசணி இலைகள், பெண்களின் உடலுக்கு தேவையான பலவகையான நன்மைகளைக் கொடுக்கின்றன. அவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், நீங்கள் பல முக்கியமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.