வைட்டமின் B7 என்றும் அழைக்கப்படும் பயோட்டின் முடி வளர்ச்சிக்கு அதிகம் உதவுகிறது. இந்த வைட்டமின் தோல் பளபளப்பிற்கும் உதவுகிறது. முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் சைவ உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பாதாம் பருப்பில் அதிகளவு வைட்டமின் B7 நிறைந்துள்ளது. இவை முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. காலை மற்றும் இரவு நேரத்தில் 4 முதல் 5 பாதாம்களை தினசரி சாப்பிடலாம்.
அதிக சத்து நிறைந்த பருப்புகளில் வால்நட்ஸ் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இவற்றில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளது. இவை முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
இனிப்பு உருளைக்கிழங்கில் அதிக அளவு பயோட்டின் உள்ளது. இவை முடியின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை வேகவைத்து அப்படியே சாப்பிடலாம்.
கீரைகளில் அதிகளவு இருப்பு சத்து உள்ளது. மேலும் இவற்றில் இரும்பு, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளதால் இவற்றை சாப்பிடுவதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
உடலுக்கு சத்து கொடுக்கும் வாழைப்பழங்கள் முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும் இவற்றை வாரம் இரண்டு நாட்கள் முடிக்கு தடவி வந்தால் பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
பருப்பு வகைகளான பட்டாணி, பீன்ஸ் போன்றவற்றில் முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தால் முடி வளர்ச்சிக்கு அதிகம் உதவும்.