Guru Dakshinamoorthy: நவகிரகங்களில் குரு பகவான், திருமணத்தடைகளை நீக்குபவர். தட்சிணமூர்த்தியையும் குருவையும் ஒருவர் என்றே பலரும் நினைத்துக் கொள்கின்றனர்.
Lord Guru Worship : தட்சிணாமூர்த்தி, சிவனின் ஸ்வரூபம் ஆவார். கல்விக்கு காரகரான தட்சிணாமூர்த்தியை மாணவர்கள் வழிபடுவது நல்லது.
தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்கினால், புத்தித் தெளிவும் செயலில் உறுதியும் கிடைக்கும். சிவனின் ஸ்வரூபம் தட்சிணாமூர்த்தி ஆவார்
தட்சிணம் என்றால் தெற்கு என்பது பொருள். தெற்குப் பார்த்த நிலையில் அமர்ந்திருப்பதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் பெற்று விளங்குகிறார் சிவபெருமான் எனச் சொல்கிறது சிவபுராணம்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு உதவியாக இருக்கும்
சனகாதி முனிவர்களுக்கு சிவபெருமானே உபதேசித்து அருளினார். அதனால்தான், ஞானம் வேண்டுபவர்கள், தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்
ஸ்ரீதட்சிணாமூர்த்தி மூலமந்திரம் ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹ;
தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம் ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே த்யாநஸ்தாய தீமஹி தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்
வீட்டில் தினசரி தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தையும் மூல மந்திரத்தையும் ஜபித்து வருவது நல்லது. வீட்டில் சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும்.
மாணவர்கள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு அவசியம்
தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிறம் உகந்தது. வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவேண்டும். 9 என்ற எண்ணிக்கை வருவது போல, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் ஊற வைத்த கொண்டைக்கடலையை மாலையாய் கோர்த்து சாற்றி வழிபட்டால் வாழ்வில் எல்லாவிதமான மேன்மைகளும் கிடைக்கும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது