Tamil Nadu cooperative society scheme | கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்காக தமிழ்நாடு அரசு புதிய நிதியுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விவரம் இங்கே
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வேர்கள் மற்றும் விழுதுகள் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது,. இந்த திட்டங்களில் சேர்ந்து எப்படி பயன்பெறலாம்? என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர் நலநிதி : கூட்டுறவு இயக்கத்திற்கு வேர்கள் போன்று ஆதாரமாக இருக்கும் அனைத்து கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன் பேணும் வகையில் உறுப்பினர் நலநிதி உருவாக்கப்பட்டு "வேர்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நோக்கம் : சங்க உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் நலன் காக்கும் வகையில் மருத்துவம், கல்வி, திருமண நிதியுதவி அளித்து சங்கங்கள் மீது பிணைப்புடன் இருந்து அதன் வளர்ச்சியில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.
திட்டத்தில் எப்படி சேர்வது? : அனைத்து கூட்டுறவு சங்கங்களின் தனி நபர் உறுப்பினர் ரூபாய் 100 மாத சந்தா செலுத்தி சேரலாம். பதிவாளர் அலுவலக வலைத்தளம் பக்கத்தில் கைபேசி எண் பதிந்து OTP வாயிலாக உள் நுழைவு செய்து உறுப்பினர் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
திட்டத்தின் பயன்கள் : உறுப்பினர் இயற்கை மரணம் எய்தினால் ரூ.50,000, இரு குழந்தைகளின் கல்விச் செலவு தலா ரூ.10,000, முழு உடல்ஊனம் அடைந்தால் ரூ.50,000, விபத்து மரணம் அடைந்தால் ரூ.1,00,000, இரு பெண் குழந்தைகளின் திருமணச் செலவு தலா ரூ.10,000, பகுதி உடல் ஊனம் அடைந்தால் ரூ.25,000. உறுப்பினர் எந்த நிதி பயனும் பெறாதவராக இருந்தால் செலுத்திய சந்தா தொகைக்கு ஏற்ப ரூ. 7500 முதல் ரூ. 1 லட்சம் வரை நிதி பயன் பெறலாம்.
எவ்வாறு நிதி உதவி பெறுவது? : உறுப்பினர் / உறுப்பினரின் நியமனதாரர், மரணம் / விபத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் RCS Portal வழியாக கைபேசி OTP வாயிலாக பதிவு செய்ய வேண்டும். RCS Portal வாயிலாக சங்க நிர்வாகத்தால் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு சரக துணைப்பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளருக்கு மேலனுப்பி பதிவாளர் தலைமையிலான மாநிலக் குழுவால் நிதியுதவி வழங்கப்படும்.
விழுதுகள் திட்டத்தின் நோக்கம் : விழுதுகள் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர் நலநிதி கூட்டுறவுச் சங்கங்களை வறுப்படுத்தும் விழுதுகளாய் திகழும் அனைத்து வகை கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலன் பேணும் வகையில் பணியாளர் நல நிதி உருவாக்கப்பட்டு 'விழுதுகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு மருத்துவ உதவி, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி, திருமணம் சார்ந்த நிதியுதவி அளித்தல். பணியாளர்கள் தங்கள் சங்கத்தின் மீது ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்ற வகை செய்வதாகும்.
பதிவு செய்தல் : அனைத்து கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் ரூ.300/ செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். http://rcs.tn.gov.in/rcsweb/welfare/login என்ற பதிவாளர் அலுவலக வலைத்தளபக்கத்தில் பக்கத்தில் கைபேசி எண் வாயிலாக OTP பெற்று உள்நுழைவு செய்யலாம். சுயவிவரங்களைப் பதிவு செய்தவுடன் சங்கத்தினால் விவரம் சரிபார்க்கப்பட்டு சரகதுணைப் பதிவாளர் /மண்டல இணைப்பதிவாளர் அவர்களால் உறுதிசெய்து உறுப்பினராகப் பதிவுசெய்யப்படும்.
விழுதுகள் திட்டத்தின் பயன்கள் : திட்டத்தின் உறுப்பினர் இயற்கை மரணம் எய்தினால் ரூ.1.00 இலட்சம், விபத்து மரணம் எய்தினால் எய்தினால் ரூ.5.00 லட்சம் கிடைக்கும். விபத்தில் பகுதி உடல் ஊனம் அடைந்தால் ரூ.1.50 லட்சம், விபத்தில் முழு உடல் ஊனம் அடைந்தால் ரூ.2.50 லட்சம், இரு குழந்தைகளின் கல்விச் செலவு தலா ரூ.25,000, இரு பெண் குழந்தைகளின் திருமணச் செலவு தலா ரூ.25,000. திட்டத்தின் உறுப்பினராகி எந்த நிதிப்பயனும் பெறாதவர்களுக்கு ரூ.25,000/ கிடைக்கும்
நிதியுதவி பெறுதல் உறுப்பினர் / உறுப்பினரின் நியமனதாரர், மரணம் / விபத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் RCS Portal வழியாக கைபேசி OTP வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இணைய வாயிலாக சங்க நிர்வாகத்தால் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு சரக துணைப்பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளருக்கு மேலனுப்பி பதிவாளர் தலைமையிலான மாநிலக் குழுவால் நிதியுதவி வழங்கப்படும்.