சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...
Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 மார்ச் 19, பங்குனி 6ஆம் நாள், வெள்ளிக்கிழமை
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.
மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக் கட்டும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு ஆலோசனை தருவார்கள். புகழ்கௌரவம் கூடும் நாள்.
கடகம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.
சிம்மம்: சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் கூட வலிய வந்து பேசுவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
துலாம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்பை ஏற்பீர்கள். நட்பால் ஆதாயம் அடையும் நாள்.
விருச்சிகம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புது பொருள் வந்து சேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். காரியம் சித்தியாகும் நாள்.
தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
மகரம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
கும்பம்: குடும்பத்தில் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
மீனம்: கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தோற்ற பொலிவு கூடும். வராது என்று இருந்த பணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.