சுகர் அதிகமாயிடுச்சா... இந்த பச்சை சட்னியை ட்ரை பண்ணுங்க - கட்டுக்குள் வரும்!

Green Chutney To Control Blood Sugar Level: உங்களின் ரத்த சர்க்கரை அளவு 200-ஐ தாண்டிவிட்டால் அதை கட்டுப்படுத்த இந்த பச்சை சட்னி பெரிய நிவாரணம் அளிக்கும் அதுகுறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம். 

  • Oct 23, 2024, 13:34 PM IST

நீரிழிவுக்கு பல்வேறு நிவாரணங்கள் இருக்கின்றன. பல வீட்டு வைத்தியங்களும் இருக்கின்றன. எனவே, நீங்கள் வீட்டு வைத்தியங்களை பின்பற்றும் முன் முறையாக மருத்துவ ஆலோனையை பெறுவது அவசியம் ஆகும்.

1 /8

உடலின் ரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும். சாப்பிடும் முன் ரத்த சர்க்கரை அளவு 70 mg/dl முதல் 100 mg/dl ஆக இருக்க வேண்டும். சாப்பிட்ட பின்னர் 100 முதல் 125 mg/dl இருக்க வேண்டும்.   

2 /8

அந்த வகையில், உங்களுக்கு ரத்த சர்க்கரை அளவு 200 mg/dl அளவுக்கு வந்துவிட்டால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே உடனே மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.   

3 /8

தொடர்ந்து நீரிழிவு நோயாளிகளும் தங்களின் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்கு பல்வேறு வீட்டு வைத்தியங்களும் உள்ளன. அந்த வகையில், முருங்கை இலை சட்னியும் (Green Chutney) இதில் உங்களுக்கு நிவாரணம் அளிக்கும்.   

4 /8

முருங்கை இலையில் (Moringa Leaves) உள்ள Oleifera உங்களின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, முருங்கை இலையை சட்னியை அரைத்து உங்களின் உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை அளிக்கும்.   

5 /8

இந்த முருங்கை இலை சட்னியை செய்ய, அதன் இலையை நன்கு கழுவி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மறுபுறம், அடுப்பில் கடாய் வைத்து அதில் 1 டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் அந்த இலையை போட்டு அது நன்கு சுருங்கும் வரை வதக்க வேண்டும்.   

6 /8

அதன்பின் அதை தனியாக எடுத்து ஆறவைத்துக்கொள்ளுங்கள். இப்போது வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.  

7 /8

அவை நன்கு வதங்கிய பின்னர் 1-2 தக்காளியை பெரிதாக பெரிதாக கூட வெட்டிப் போடலாம். அதுக்கூடவே பச்சை மிளகாயையும் போடவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். அதன்பின் அடுப்பை அணைத்து அதனை சூடு ஆறவையுங்கள். இப்போது இதையையும், வதக்கிய முருங்கை இலையையும் சேர்த்து நன்கு சட்னி பதத்திற்கு மிக்ஸியில் அரைக்கவும். வேண்டுமென்றால் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு  தாளிசம் போட்டுக்கொள்ளலாம்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் உங்களின் தகவலுக்காக கொடுக்கப்பட்டவை. இது பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.