Health Tips: மறதியை ஒழிக்க இந்த ஐந்தும் முக்கியம்... தவறாமல் சாப்பிடுங்கள்

உங்களுக்கு 50 வயது தாண்டிவிட்டதென்றால், ஞாபக மறதியில் பாதிக்கப்படாமல் இருக்க உங்களின் உணவுகளில் இந்த 5 நட்ஸ்களை எப்போதும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • Feb 04, 2024, 21:19 PM IST

 

 

 

 

 

 

1 /7

வயது ஆக ஆக, மூளை செல்களின் செயல்பாடுகளிலும் சற்று தொய்வு ஏற்படும். அதனால், உங்களுக்கு 50 வயது தாண்டிவிட்டால், இவற்றை சாப்பிடுவதன் மூலம் மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கலாம், ஞாபக மறதியையும் தவிர்க்கலாம்.  

2 /7

குறிப்பாக, பாதாம், முந்திரி போன்ற கொட்டைகள் சார்ந்த உணவு பொருள்கள் உங்கள் மூளையின் வளர்ச்சிக்கும் பெரும் ஊட்டம் அளிக்கக்கூடியவை. அந்த இந்த ஐந்து நட்ஸ்களை உங்களின் அன்றாட உணவுகளில் நீங்களும் சேர்த்துக்கொள்ளலாம்.   

3 /7

பிஸ்தா: இது சிறந்த நட்ஸ்களில் ஒன்று. இது மூளையை உடனே சுறுசுறுப்பாக்கும். 

4 /7

வால்நட்ஸ்: உங்களுக்கு வயதாகும் தோற்றத்தை இது குறைக்கும். மேலும், உங்கள் மூளை சார்ந்த ஏற்படக்கூடிய நோய்களை தடுக்கவும் உதவும். 

5 /7

பாதாம்: பாதாம் ரைபோஃபிளாவின் மற்றும் பிற சத்துகளை உள்ளடக்கியது. இதனால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.   

6 /7

முந்திரி: இதில் மேக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை உள்ளதால் மூளைக்கு பயனளிக்கும்.   

7 /7

மக்காடாமியா: இதில் அதிக மினரல்கள் உள்ளதால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.