வங்கிகளில் முதலீடு செய்வதை விட, அதிக வருமானம் கிடைப்பதால், நடுத்தர மக்களில் இருந்து, பணக்காரர்கள் வரை பலர் எஸ்.ஐ.பி. எனப்படும் முதலீடுகள் மூலம் பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.
பணத்தை விரவில் பன்மடங்காக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், சிலர் செய்யும் தவறுகளால், பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்காமல் இருக்க கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
நடுத்தர மக்களில் இருந்து, பணக்காரர்கள் வரை பலர, எஸ்ஐபி மூலம் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதில், அவரவர் தங்களது வசதிக்கேற்ப மாத மாதம் முதலீடு செய்து கொள்ளலாம். இதனால், இது வருமானத்தை பெருக்கும் பெரும் வாய்ப்பாக பலர் கருதுகின்றனர்.
மாத மாதம் முதலீடு செய்யும் தொகை சிறிய அளவிலிருந்தாலும் மிகப் பெரிய அளவிலான நிதியை உருவாக்க முடியும். ஆனால், எஸ்.ஐ.பி. மூலம் உங்கள் வருவாயை அதிகரிக்க முதலீட்டாளர்கள் செய்யும் பொதுவான 5 தவறுகளை தவிர்ப்பது முக்கியம். இல்லை என்றால், பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடலாம்.
முதலீட்டாளர்கள் செய்யும் பொதுவான தவறுகளில் ஒன்று, தாங்கள் எங்கு, எதற்காக முதலீடு செய்கிறோம், எவ்வளவு முதலீடு செய்ய முடியும் மற்றும் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற விஷயங்களில் விரபம் ஏதும் அறியாமல் இல்லாமல் முதலீடு செய்கின்றனர்.
எஸ்.ஐ.பி. (SIP) திட்டத்தில் முதலீடு தொடங்குவதற்கு முன், ஏன் முதலீடு செய்கிறீர்கள் என்பதை முதலில் முடிவு கொள்ள வேண்டும். ஓய்வு காலத்துக்காக, வீடு வாங்க அல்லது உங்கள் பிள்ளையின் கல்விக்காக என எதற்காக சேமிக்கிறீர்கள் என்பதை பொறுத்து, முதலீடுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும்.
எஸ்.ஐ.பி முதலீடுகளுக்கு நிதி ஒதுக்கும் தொகை உங்களது வருமானத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதிகமாக முதலீடு செய்தால், உங்கள் மாதாந்திர செலவுகளை சமாளிப்பது சவாலாக இருக்கும்.இது உங்கள் நிதி நிலைமையையும் பாதிக்கும். , அதே சமயம் மிகக் குறைவாக முதலீடு செய்வது நீண்ட காலத்திற்கு விரும்பிய வருமானத்தை அளிக்காது.
முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை, ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல் பல்வேறு திட்டங்களில் பிரித்து போட்டு முதலீட்டை பல்வகைப்படுத்துதல் அவசியம். பல்வேறு எஸ்.ஐ.பி. திட்டங்கள் அல்லது நிதிகளில் உங்கள் முதலீடுகளை பங்கு, கடன் பத்திரங்கள் மற்றும் ஹைப்ரிட் பண்டுகள் உள்பட பல்வேறு சொத்துக்களில் பிரித்து போடுவது நல்லது.
எஸ்.ஐ.பி. கள் நீண்ட கால செயல் முறையாகத்தான் மேற்கொள்ள வேண்டும் என்றாலும் முதலீடுகளை அவ்வப்போது ஆராய்ந்து, அதைலிருந்து எவ்வளவு வருவாய் வந்துள்ளது என மதிப்பீடு செய்வது அவசியம். வெற்றிக்கரமான எஸ்.ஐ.பி. முதலீட்டிற்கு உங்கள் போர்ட்போலியாவை அடிக்கடி ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களை செய்வது முக்கியம்.