கிராம்பு நீரை குடிப்பதால்... உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் - இதயம் முதல் கல்லீரல் வரை!

Clove Water Health Benefits: நீங்கள் தினமும் கிராம்பு நீரை குடிக்கும்பட்சத்தில் உங்களின் உடலுக்கு கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம். 

  • Oct 22, 2024, 20:40 PM IST

கிராம்பு (Clove) மருத்துவ குணம் நிறைந்த ஒன்றாகும். இதன்மூலம் நீங்கள் வீட்டிலேயே கிராம்பு நீரை தயாரிக்கலாம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துகளால் உடலில் ஏற்படும் நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.

 
1 /8

கிராம்பு நீரை நீங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். சிறிதளவு கிராம்பை எடுத்துக்கொண்டு அதை நீரில் 15-20 நிமிடங்களுக்கு கொதிக்கவைத்து அதனை வடிகட்டி சூடு ஆறவைத்து குடிக்க வேண்டும்.   

2 /8

இந்த கிராம்பு நீரை குடிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் 5 நன்மைகள் இங்கு காணலாம்.   

3 /8

செரிமான சிக்கல் தீரும்: கிராம்பு நீர் செரிமான பிரச்னைக்கு இயற்கையான நிவாரணமாகும். வயிற்றில் உப்புசம், வாயு தொல்லை, வயிற்று வலி போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும். செரிமான சிக்கல் இருந்தால் இதனை உடனடியாக எடுத்துக்கொள்ளலாம்.   

4 /8

இதய ஆரோக்கியம்: கிராம்பு நீரில் தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும். கிராம்புகளில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அசுத்தங்களை ரத்தத்தில் இருந்து எடுத்து, இதய நோய் ஆபத்தை குறைக்கும்.   

5 /8

கல்லீரல் ஆரோக்கியம்: கிராம்பு நீர் என்பது கல்லீரலை சிறப்பாக செயலாற்ற உதவும். கிராம்புகளில் காணப்படும் யூஜெனால் என்பது கல்லீரல் அலர்ஜி மற்றும் ஃபேட்டி லிவர் நோயின் அறிகுறிகளை குறைக்கவும் உதவும்.  

6 /8

கிராம்பு அவற்றின் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளுக்கு அறியப்பட்ட பல மூலக்கூறுகளை கொண்டுள்ளது. இது உங்கள் உடலின் அலர்ஜி எதிர்வினையை குறைப்பதாக காட்டப்பட்டுள்ளது. இது கீல்வாதம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கும்.   

7 /8

கிராம்பு நீரில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலின் பாதுகாப்பை வழங்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அலர்ஜியை குறைக்கின்றன. தொற்றுகள், நோய்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.  

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பு ஏற்காது.