கேஎல் ராகுலின் சிறந்த 5 டெஸ்ட் இன்னிங்ஸ்... ஓர் பார்வை?

KL Rahul: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் 101 ரன்களை குவித்து அசத்தினார். அந்த வகையில், அவரின் சிறப்பான டாப் 5 டெஸ்ட் ஆட்டங்களை இதில் காணலாம். 

1 /7

கேஎல் ராகுல் கடந்த 2014ஆம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இதேபோன்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தற்போது வரை இவர் 8 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.  

2 /7

குறிப்பாக, அந்த 8 சதங்களில் 7 வெளிநாட்டில் அடித்துள்ளார். அந்த வகையில், கேஎல் ராகுலின் சிறந்த டாப் 5 ஆட்டங்களை இங்கு நினைவுக்கூர்வோம்.  

3 /7

199 vs இங்கிலாந்து (2016): சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் 199 ரன்களை எடுத்தார்.  

4 /7

158 vs மேற்கு இந்திய தீவுகள் (2016): 2016ஆம் ஆண்டில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 158 ரன்களை கேஎல் ராகுல் குவித்தார்.   

5 /7

149 vs இங்கிலாந்து (2018): 2018ஆம் ஆண்டில் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் 149 ரன்களை குவித்தார். குறிப்பாக, இந்தியா அப்போது 464 ரன்கள் என்ற இலக்கை துரத்தி, வெற்றியும் கண்டது.   

6 /7

110 vs ஆஸ்திரேலியா (2015):  இவர் அறிமுகமான இந்த டெஸ்ட் தொடரில்தான். முரளி விஜய் உடன் ஓப்பனிங் இறங்கிய இவர் ஹசில்வுட், ஸ்டார்க், ரியான் ஹரிஸ், ஷேன் வாட்சன், நாதன் லயான் ஆகியோரை தாக்குபிடித்து 262 பந்துகளுக்கு 110 ரன்களை கேஎல் ராகுல் எடுத்தார்.  

7 /7

108 vs இலங்கை (2015): கொழும்புவில் உள்ள பி சாரா ஓவல் மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக ராகுல் 108 குவித்தார்.