இதயக் கோளாறைத் தரும் சூரியனின் ஆதிபத்தியம்! எலும்பு & கண் பிரச்சனைக்கும் காரணம் சூரியனே!!

Adhithyan For Health & Unhealth : ஆதித்யனின் ஆதிபத்தியமும் ஆரோக்கியமும் ஒருவரின் ஜாதகத்தை பொறுத்ததே. பிறந்த நேரத்தில் இருக்கும் கோள்களின் இருப்பின் அடிப்படையில், சூரியன் கொடுக்கும் வரங்களும் தோஷங்களும் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பதாக இருக்கிற்து

Sun In Horoscope : ஆதித்யனின் ஆதிபத்தியத்தை பொறுத்து சூரியன் தரும் யோகங்களும் தோஷங்களும்... 

1 /8

அனைத்து உயிர்களுக்கும் ஆத்மகாரகன் என அறியப்படும் சூரியன், ஒருவருக்கு தேக வலிமையையும் மன வலிமையையும் தருபவர் என்றால், அவர், மனித உடலில் இருதயத்தை ஆள்பவர் என்றும், கண்கள், எலும்புகள் ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெற்றவர்  

2 /8

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் எவ்வளவு வலு பெற்றிருக்கிறார் என்பதைப் பொறுத்து நற்பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் சூரியன் அதிக சுபத்துவம் அடைந்திருந்தால் தான் அரசாங்கத்தில் உயர் பதவிகளும்,கௌரவம் மரியாதை போன்றவை சாத்தியமாகும்

3 /8

சூரியன் பலவீனமாக இருந்தால், அவர் ஜாதகருக்கு இருதய நோயை உருவாக்குவார். அதுமட்டுமல்லாமல் கண்பார்வை கோளாறு, மாலைக்கண் நோய், தலைவலி, எலும்புகளில் பிரச்சனையை ஏற்படுத்துவார்

4 /8

ஜாதகத்தில் கோட்சாரத்தில் சூரியன், பாவ கிரக தொடர்பு ஏற்பட்டு காணப்பட்டால், முதுகு வலியை ஏற்படுத்துவார். அதுவே கோட்சாரம் சரியாகும் பொழுது முதுகு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்

5 /8

ரத்தக் கொதிப்பு, இருதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பு என பல பிரச்சனைகள் ஏற்பட காரணம் சூரியன் அசுபராக இருப்பதால் தான்...  

6 /8

ஜாதகத்தில் சூரியன் பலவீனமாகும் பொழுது, அரசாங்க வேலையையும் கொடுத்து அதில் பெரும் அவமானத்தையும் உருவாக்குபவர் சூரியன் 

7 /8

சூரியன் ராகுவுடன் அல்லது பாவ கிரகங்களுடன் இணைந்து சுப கிரக தொடர்பு இல்லாவிட்டால் குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும், ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்துக் கொண்டே இருக்கும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது