ஆரஞ்சு தோலை தேய்த்தால் சருமம் பளபளக்குமா? பதிலை தெரிந்து கொள்வோம்!

Orange Peel Health Benefits Tamil: ஆரஞ்சு பழத்தில் பல நன்மைகள் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியும். அதன் தோலிலும் பல நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாமா? 

1 /7

ஆரஞ்சு தோலை அரைத்து முகத்தில் தடவுவதால் சருமம் பளபளப்பாகும் என பலர் சொல்லி கேட்டிருப்போம். இது உண்மைதானா? இங்கு பார்ப்போம். 

2 /7

ஆரஞ்சு பழத்தில் மட்டுமன்றி, ஆரஞ்சு பழத்தின் தோலிலும் பல நன்மைகள் நிறைந்துள்ளது. இந்த தோலை, வீட்டை சுத்தப்படுத்தவும், சருமத்தை சுத்தப்படுத்தவும் கூட உபயோகிக்கலாம். அப்படி இதில் நிறைந்துள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று, சருமத்தை பளபளப்பாக்குவது. 

3 /7

ஆரஞ்சு பழ தோலை காயவைத்து அதை பொடியாக்கி தண்ணீர் கலந்து முகத்தில் தடவலாம். இது, முகத்தில் உள்ள இறந்து போன செல்களை நீக்க உதவும். இதனால், முகம் இயற்கையாகவே பளபளப்பாகும். 

4 /7

ஆரஞ்சு பழ தோலை, வீட்டை சுத்தப்படுத்தும் இயற்கை திரவியமாகவும் உபயோகிக்கலாம். இந்த தோல்களில் இயற்கையாக வினிகரை கலந்து உபயோகிக்கலாம். எண்ணெய் பசை இருக்கும் இடங்களில் இதை வைத்து தேய்த்து சுத்தப்படுத்துவதால் சுத்தமாகி விடும். 

5 /7

சிட்ரஸ் டீ என்பதை பலரும் கேள்வி பட்டிருக்க மாட்டோம். இதை செய்ய வெயிலில் காய வைத்த ஆரஞ்சு தோல்களை சேர்க்க வேண்டும். இதனால், எப்போதும் குடிக்கும் டீயிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். 

6 /7

ஆரஞ்சு தோல், இயற்கையான பூச்சுக்கொல்லியாகவும் விளங்குகிறது. ஆரஞ்சு பழ தோலை வீட்டின் நுழைவாயிலிலோ,  தோட்டம் இருக்கும் பகுதியிலோ, அல்லது அதிகம் கொசு பரவும் இடங்களிலோ வைப்பதால் தேவையற்ற பூச்சிகள் வீட்டிற்குள் உலா வருவதை தவிர்க்கலாம். 

7 /7

ஆரஞ்சு தோல் உடல் எடையை குறைக்கவும் வழி வகை செய்கிறது. இதில், மெட்டபாலிச சக்தி அதிகம் உள்ளதால் பசித்தன்மையை நீக்கி புரத சத்துக்களை உடலுக்கு அளிக்கிறது. இது, உடல் எடையை குறைக்க உதவும்.