விவேக் மூர்த்தி: உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாகக் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக டாக்டர் விவேக் மூர்த்தியை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பரிந்துரைத்துள்ளார். இந்த தகவலை வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 45 வயதான டாக்டர் மூர்த்தி ‘சர்ஜன் ஜர்னல்’ என்ற பொறுப்புடன் புதிய ஒரு பொறுப்பையும் வகிப்பார். மார்ச் 2021 இல், அமெரிக்க செனட், நாட்டின் 21வது 'சர்ஜன் ஜெனரலாக' அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தது. முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் 19வது 'சர்ஜன் ஜெனரலாக' அவர் பணியாற்றினார்.
சர்ஜன் ஜெனரலின்: இந்த பணியின் பொறுப்புகள் என்ன?
'சர்ஜன் ஜெனரல்' பதவியை வகிக்கும் ஒருவரின் பணி, தெளிவான, நிலையான மற்றும் சமமான வழிகாட்டுதல் மற்றும் வளங்களை வழங்குவதன் மூலம் நாட்டின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதாகும். 21 ஆவது 'சர்ஜன் ஜெனரலாக' டாக்டர். மூர்த்தி பல முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சனைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தார். இதில் உடல்நலம் சார்ந்த தவறான தகவல்கள் அதிகரித்து வருவது, இளைஞர்களிடையே உள்ள உளவியல் சிக்கல்கள் ஆகியவை அடங்கும்," என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.' '
மேலும் படிக்க | Investment: இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பமா? NRIகளுக்கான இந்திய சட்டங்கள் இவை
அமெரிக்க பொது சுகாதார சேவை கமிஷன் கார்ப்ஸின் வைஸ் அட்மிரலாக, டாக்டர் மூர்த்தி 6,000க்கும் மேற்பட்ட பொது சுகாதார அதிகாரிகளை வழிநடத்துகிறார். இந்த பொது சுகாதார அதிகாரிகள் மிகவும் பின்தங்கிய மக்களுக்காக பணிபுரிகின்றனர்.
டாக்டர் விவேக் மூர்த்தியின் பின்னணி
முதல் இந்திய வம்சாவளி சர்ஜன் ஜெனரலான டாக்டர் மூர்த்தி, மியாமியில் வளர்ந்தார். ஹார்வர்ட், யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் யேல் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் படித்தார். புகழ்பெற்ற மருத்துவர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில்முனைவோர் மற்றும் எழுத்தாளர் மூர்த்தி வாஷிங்டன் டிசியில் தனது மனைவி டாக்டர். ஆலிஸ் சென் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் என வெள்ளை மாளிகையின் அறிக்கை தெரிவிக்கிறது.
மூர்த்தி யார்க்ஷயரில் உள்ள ஹடர்ஸ்ஃபீல்டில் பிறந்தார். அடிப்படையில் அவர் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1978 இல் அவரது குடும்பம் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டிற்கு குடிபெயர்ந்தது. அங்கு அவரது தந்தை மாவட்ட மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார். மூர்த்திக்கு மூன்று வயதாக இருந்தபோது, அவருடைய குடும்பம் அமெரிக்காவின் மியாமிக்கு குடிபெயர்ந்தது.
மேலும் படிக்க | வெளிநாட்டில் வேலையா? நீங்களும் EPF மூலம் பயன் அடையலாம், இதோ விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ