துபாய்: துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம், அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில், அதாவது மே 22 மற்றும் மே 29 ஆம் தேதிகளில் அவசரகால பாஸ்போர்ட் புதுப்பித்தல் சேவைக்கான சேவை முகாம்களை நடத்த உள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
"துபாயின் இந்திய துணைத் தூதரகம், ஞாயிற்றுக்கிழமைகளில் (22.05.22 & 29.05.22) துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள நான்கு BLS இன்டர்நேஷனல் சர்வீஸ் லிமிடெட் மையங்களில் வாக்-இன் பாஸ்போர்ட் சேவை முகாம்களை கீழே குறிப்பிட்டுள்ளபடி ஏற்பாடு செய்யும்" என்று சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவசரகால கடவுச்சீட்டு மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, புலம்பெயர்ந்த இந்தியர்களுக்காக பாஸ்போர்ட் சேவை முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு BLS மையங்களில் தேவையான ஆதாரங்களுடன் வாக்-இன் அடிப்படையில் (அபாயின்ட்மென்ட் இல்லாமல் மற்றும் முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில்) சமர்ப்பிக்கலாம் ” என்று செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு
யாரெல்லாம் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்?
பின்வரும் வகைகளில் உள்ள அவசரகால சேவை தேவைப்படும் நபர்களது விண்ணபங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இவர்களிடம் சரியான ஆவண ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது என்று துணைத் தூதரகம் கூறியுள்ளது.
- அவசரகால தேவைகள் (மருத்துவ சிகிச்சை, இறப்பு)
- பாஸ்போர்ட் காலாவதியானவர்கள் அல்லது 30.06.2022க்குள் காலாவதியாகும் பாஸ்போர்டுகளை கொண்டிருப்பவர்கள்
- காலாவதியான அல்லது ரத்து செய்யப்பட்ட விசாவை மீண்டும் முத்திரையிட அவசர பாஸ்போர்ட் புதுப்பிப்பு தேவையானவர்கள்
- புதிய வேலைக்கு விசா பெற வேண்டியவர்கள்
- வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) சான்றிதழ்களைப் பெற (கல்வி நோக்கங்களுக்காக)
- போலிஸ் அனுமதிச் சான்றிதழைப் பெற (அவசர வேலை/குடியேற்ற நோக்கத்திற்காக)
- இந்தியாவிற்கு கல்வி நுறுவனங்களில் சேர பயணிக்கும் மாண்வர்களுக்கு
- வெளிநாட்டு மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான பாஸ்போர்ட் புதுப்பித்தல்.
நேரம் மற்றும் இடம்
அல் கலீஜ் மையம் மற்றும் டெய்ரா சிட்டி சென்டரில் உள்ள BLS மையங்கள், துபாயில் உள்ள BLS பிரீமியம் லவுஞ்ச் மையம் மற்றும் ஷார்ஜா HSBC கட்டிடத்தில் உள்ள BLS மையம் ஆகியவை பாஸ்போர்ட் சேவை முகாம்களாக செயல்படும்.
சிறப்பு முகாம்கள் மே 22 மற்றும் மே 29 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான டோக்கன்கள் பிற்பகல் 1.30 மணிக்கு வழங்கப்படும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு முக்கிய செய்தி: இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR