சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த படத்தில் போடப்பட்ட ஸ்லம் செட் தான் தமிழ் சினிமாவில் முதல் பெரிய ஸ்லம் செட் ஆகும். இந்த செட்டை சுமார் 8 ஏக்கரில் போடப்பட்ட இந்த ஷெட்டில் ரெயில்வே பாலம், சர்ச், மசூதி, கோவில், கூவம் ஆறு என எல்லாவற்றையும் கொண்டு வந்திருக்கிறார். செட்டுக்கான பட்ஜெட் 6 கோடி என தெரிவித்துள்ளனர்.
இதனை உருவாக்கிய கலை இயக்குனர் முத்துராஜ். இந்த செட்டை முழுவதும் முடிக்க 55 நாட்கள் ஆனதாம். இந்த செட்டின் மொத்த பரப்பளவு 7.5 ஏக்கராகும். இந்த செட்டில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்களாம்.
இந்த நிலையில் இந்த செட்டை இன்னும் பிரிக்காமல் உள்ளனர். அதற்கு ஒரு முக்கிய காரணம், இந்த செட்டை அனைவரும் பார்க்க ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்பதுதானாம்.
விரைவில் வேலைக்காரன் படக்குழுவினர்களிடம் இருந்து மீடியா, மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை படக்குழுவினர் இந்த செட்டுக்கு அழைத்து சென்று சுற்றிக்காட்ட திட்டமிட்டுள்ளார்களாம்.
இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிருநாட்களில் வெளிவரும் என தெரிகிறது.