இந்த வருடம் வசந்த நவராத்திரி பண்டிகை, நாளை முதல் துவங்கி வரும் 14ம் தத்தி வரை நடைபெற உள்ளது.
இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து கொண்டாடுவதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. இந்த திருநாளில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறுவது வழக்கம்.
வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.
வசந்த நவராத்திரி பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள் பிரதமை - தெலுங்கு வருடப் பிறப்பாகிய யுகாதிப் பண்டிகையாக அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீ ராம நவமியுடன் முடியும்.
வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும், ஒரு பட்சம் நாட்கள் அதாவது 15 நாட்கள் கொண்டாடுதல் வேண்டும்.