வீட்டில் வளர்க்கப்படும் ஒரு சாதாரண பூனை அதிர்ஷ்டத்தின் உருவம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், பூனை உண்மையாகவே அதிர்ஷ்டமான, வலிமையான மற்றும் கடவுளாக குறிப்பிட்ட கால மக்களால் பாவிக்கப்பட்டு இருந்திருக்கின்றது. பூனை குறுக்கே சென்றால் அபசகுனம் என்று சொல்லும் நபர்களுக்கு மத்தியில், எகிப்தில் வாழந்த மக்கள் பூனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தெய்வமாக கருதி வழிபாடு மேற்கொண்டு வந்துள்ளனர். இவ்வளவு ஏன் அந்த நாட்டு மக்கள் பூனைக்காக பெர்ஷியாவுடனான போரில் தோற்றுப்போன வரலாறும் கூட உள்ளது. அந்த அளவிற்கு அவர்கள் பூனைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர், பூனைக்கு யாரேனும் இடையூறு ஏற்படுத்தினாலோ அல்லது அதனை கொலை செய்ய முயன்றாலோ அவர்களை கொல்லவும் துணிந்தனர்.
மேலும் படிக்க | கல்லறையின் சாபம்: திறக்காதே எச்சரிக்கும் 1800 ஆண்டு பழைய கல்லறை
இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற பூனைக்கு கப்பலிலும் முக்கியத்துவம் கிடைக்கிறதாம். ஒவ்வொரு நாட்டுடன் வணிக தொடர்பு செய்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கப்பல் பயணங்கள் நாளடைவில் மனிதர்கள் செல்வதற்கும் பயன்பட ஆரம்பித்துவிட்டது. தற்போது வீடு போன்றே சகல வசதிகளுடன் கூடிய சொகுசு கப்பல்களும் அதிகம் வந்துவிட்டது, இந்த போக்குவரத்து அமைதியான சூழலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கப்பலில் பயணம் செய்யும் சில பயணிகள் சென்டிமெண்டாக அவர்கள் வளர்க்கும் பூனைகளை உடன் எடுத்துசெல்கின்றனர். சிலர் பூனையின் மீதுள்ள பிரியத்தினால் எடுத்து செல்லலாம், ஆனால் அதற்கு பின்னால் ஒரு ரகசியம் மறைந்து இருக்கிறது.
பொதுவாகவே விலங்குகளுக்கு உணர்திறன் அதிகம், அதிலும் பூனைக்கு உணர்திறன் சற்று அதிகமாக இருக்கிறதாம். அதனால் இவற்றை கப்பல்களில் கொண்டு செல்லும்போது, ஏதேனும் இயற்கை சீற்றம் ஏற்படுவதை முன்னரே அறிந்து நமக்கு சில குறிப்புகளின் மூலம் உணர்த்திவிடுமாம். உதாரணமாக ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் ஒருவகை பதற்றத்துடன் ஓடுவது அல்லது எப்போதும் இருப்பதை போலல்லாமல் வித்தியாசமாக நடந்துகொள்வது போன்று எதையாவது பூனைகள் செய்யுமாம். நாய், பசு மாடு போன்ற விலங்குகளுக்கு பேய் வருவது எப்படி கண்ணுக்கு தெரியும் என்று கிராமப்புறங்களில் நம்பப்படுகிறதோ, அதேபோன்று தான் பூனைகள் காலநிலை மாற்றத்தை முன்னரே கணித்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.
அதன் காரணமாக தான் பூனைகளை கப்பலில் கொண்டு செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதேபோல மற்றோரு கருத்து என்னவென்றால் கப்பல்களில் இருக்கும் எலிகள் சில மின்சார வயர்கள், சரக்குகள், மரப்பலகைகள் போன்ற எதையாவது கடித்து பாழாக்கிவிடும் என்கிற காரணத்தினாலும் கூட பூனைகள் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனால் தற்போது பல போக்குவரத்துகளில் விலங்குகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | OMG! உலகின் விலையுயர்ந்த தண்ணீர் பாட்டிலின் விலை எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR