Ola Electric Scooter Launch: மின்சார வாகன பிரியர்கள் நீண்ட காலமாக காத்திருந்த தருணம் வந்துவிட்டது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஓலா மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தியை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டது. இந்த நிலையில், ஓலா எலக்ட்ரிக் இப்போது அதன் முதல் மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளைத் துவகியுள்ளது.
ஓலா மின்சார ஸ்கூட்டரின் (Ola Electric Scooter) பெயர் Ola Series S என இருக்கக்கூடும் என ஊகங்கள் உள்ளன. ஸ்கூட்டரை வாங்க விருப்பம் கொண்டவர்களின் வசதிக்காக, ஓலா நிறுவனம் முன்பதிவு தொகையை வெறும் ரூ.499 ஆக நிர்ணயித்துள்ளது.
முன்பதிவு தொடங்கியவுடன் பலரும் அதற்கு முயற்சித்ததால், சில நேரம் ஆன்லைன் முன்பதிவில் பிரச்சனை இருந்தது. இருப்பினும் இப்போது ஓலா நிறுவனம் இதை சரி செய்து விட்டது.
It’s day 1 of the revolution, the day we’ve all been eagerly waiting for!
The Ola Electric Scooter can now be reserved at just Rs. 499.
So #ReserveNow to #JoinTheRevolution at https://t.co/5SIc3JyPqm and be first in line to the future of mobility! pic.twitter.com/UAWuy33d8q
— Ola Electric (@OlaElectric) July 15, 2021
நீங்களும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் Ola Series S ஸ்கூட்டரை வாங்க முன்பதிவு செய்ய விரும்பினால், கீழே அளிக்கபட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
ALSO READ: Ola Electric Scooter: அட்டகாசமான டீசர் ரிலீஸ், சாலைகளில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர்
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு: ஓலா சீரிஸ் எஸ்-ஐ முன்பதிவு செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
1. olaelectric.com இல் உள்நுழைந்து, 'ரூ 499 க்கு ரிசர்வ்' (eserve for Rs 499) பொத்தானைக் கிளிக் செய்யவும்.
2. உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சா சரிபார்ப்பு பெட்டியை டிக் செய்து, 'Next’ -ஐ கிளிக் செய்யவும்.
3. உங்கள் மொபைல் எண்ணில் நீங்கள் பெற்ற OTP ஐ உள்ளிட்டு 'Next’ -ஐ கிளிக் செய்யவும்.
4. புதிதாக திறக்கும் டயலாக் பாக்சில் ‘Total Payable – Rs 499’ பெட்டி டெபிட் / கிரெடிட் கார்டு, யுபிஐ மற்றும் நெட்பேங்கிங் ஆகிய மூன்று கட்டண விருப்பங்கள் காணப்படும்.
5. உங்களுக்கு வசதியான கட்டண ஆப்ஷனைத் தேர்வு செய்த பின்னர் கட்டணம் செலுத்தும் பேமெண்ட் கேட்வேக்கு அனுப்பப்படுவீர்கள்.
6. கட்டணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டவுடன், வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் வழியாக மொபைல் எண் மற்றும் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் ஆர்டர் ஐடி மற்றும் பிற விவரங்களை பெறுவார்கள்.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு: பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறை
முன்பதிவு செய்தபின் ஸ்கூட்டரை (Electric Scooter) வாங்கும் முடிவில் வாடிக்கையாளர்களுக்கு மனம் மாறினால், அவர்கள் ஆர்டரை ரத்து செய்யலாம். அந்த நிலையில், முன்பதிவு தொகை முழுமையாக திருப்பித் தரப்படும். ஏழு முதல் பத்து வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளர் கட்டணம் செலுத்திய அதே முறையில் தொகை திருப்பி செலுத்தப்படும்.
வாடிக்கையாளர் விரும்பினால், அவர் தனது முன்பதிவை வேறொருவர் பெயரிலும் மாற்றலாம். இதற்கு support@olaelectric.com என்ற மின்னஞ்சல் கோரிக்கையை அனுப்ப வேண்டும்.
ஓலா (Ola) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வகைகள், வண்ணங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் சார்ஜிங் விவரங்கள்
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா சீரிஸ் எஸ், ஓலா எஸ் 1 மற்றும் ரேஞ்ச்-டாப்பிங் ஓலா எஸ் 1 புரோ ஆகிய மூன்று பதிப்புகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வண்ணங்களைப் பொறுத்தவரை, மேட் பிளாக், மேட் பிங்க், மேட் ஸ்கை ப்ளூ மற்றும் மேலும் பல வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படக் கூடும்.
வாடிக்கையாளர்கள் ஓலா இ-ஸ்கூட்டரின் நிறம் மற்றும் வகையை தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனையும் பெறுவார்கள். தங்களது இ-ஸ்கூட்டரை 5A ஸ்டாண்டர்ட் சாக்கெட் மூலமோ அல்லது நிறுவனத்தின் ஹைப்பர்சார்சர் சார்ஜிங் ஸ்டேஷன்களிலிருந்தோ சார்ஜ் செய்து கொள்ளலாம் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஓலாவின் சார்ஜிங் ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது 400-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவாக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ALSO READ: Ola E Scooter: படங்களை பகிர்ந்து டீசர் வெளியிட்ட CEO, விரைவில் வருகிறது ஓலா!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR