சோமன் என்ற சொல்லுக்கு பார்வதியோடு இணைந்த சிவபெருமான் என்ற பொருள் உண்டு. திங்கட்கிழமையை சோம வாரம் எனக் கூறுவார்கள். திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். திங்கட்கிழமை கடைபிடிக்கும் விரதம் சோமவார விரதம் என கூறப்படுகிறது.
சோமவார விரதத்தை மேற்கொள்ளும் நாளில் அதிகாலையில் பெண்கள், நீராடிய பிறகு, வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம். சிவ பெருமானின் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சனை செய்தால் அனைத்து பாவங்களும் அகன்று, வளம் உண்டாகும். திருமணம் நடைபெற்றாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். நோயில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை பெறலாம்.
ALSO READ | தீராத பண பிரச்சனைக்கு தீர்வை தரும் வாஸ்து சாஸ்திரம்..!!!
இந்த விரதத்தைக் ஆண்கள், பெண்கள் இருவரும் கடைப்பிடிக்கலாம். அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு வேளை மட்டும், பழங்களை உட்கொண்டு விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கலாம். விரதமிருப்பவர்கள் காலையோ அல்லது மாலையோ சிவாலயத்திற்குச் சென்று வழிபடலாம்.
கணவன், மனைவி இருவரும் இணைந்து இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் அவர்களுக்கும் ஒற்றுமை ஏற்பட்டு, வாழ்க்கையில் என்றும் பிரியாமல், அனைத்து வளங்களையும் பெற்றும், மகிழ்ச்சியாக வாழலாம்.
அதோடு, மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், ஆகியவை நீங்கி, வாழ்க்கையின் இருள் நீங்கி ஒளி வீசும்.
பிரிந்த குடும்பம், அல்லது பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர, திங்கட்கிழமை விரதமான சோம வார விரத்தை கடைபிடித்து, பக்தியுடன் சிவபெருமானை பூஜித்து வந்தால், பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள் என்பது உறுதி. பிரிந்தவரையும் சேர்க்கும் இந்த விரதம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது.
சோமவார தினமான திங்கட்கிழமை காலையில் வீட்டில் தீபம் ஏற்றிச் சிவனை பூஜித்து விரதம் இருந்து ஒரு வேளை மட்டும் உணவு உண்டு, மறுநாள் குளித்து பூஜை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். இவ்வாறு விரதம் செய்பவர்கள் திருக்கயிலையில் இருக்கும் சிவபெருமானைன் அருளை பெறலாம்.
ALSO READ | Vastu Tips: பர்ஸ் எப்போது நிறைந்திருக்க அதில் சிலவற்றை மறந்தும் வைக்கக் கூடாது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR