TNPLல் வேலை வாய்ப்பு - இரண்டு லட்சம்வரை சம்பளம்

தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்டில் இரண்டு லட்சம் ரூபாய்வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 14, 2022, 12:49 PM IST
  • டிஎன்பிஎல்லில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
  • இரண்டு லட்சம் ரூபாய்வரை ஊதியம்
  • விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17ஆம் தேதி கடைசி நாளாகும்
TNPLல் வேலை வாய்ப்பு - இரண்டு லட்சம்வரை சம்பளம் title=

தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் (TNPL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager, Company Secretary காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி General Manager, Deputy General Manager, Company Secretary பணிக்கென மொத்தம் 3 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,

General Manager – 1
Deputy General Manager – 1
Company Secretary – 1 என்ற விகிதத்தில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree, CA/ CMA, Engineering/ MCA/ M.Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

General Manager/ Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 46 என்றும் அதிகபட்ச வயதானது 57 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க  |டிகிரி முடித்தவர்களுக்கு CSB வங்கியில் வேலை - முழு விவரம்

Company Secretary பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 43 என்றும் அதிகபட்ச வயதானது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

General Manager/ Deputy General Manager (IT) – ரூ. 2,54,938 முதல் ரூ.2,88,049

Deputy General Manager (Finance) – ரூ. 2,62,391

Company Secretary – ரூ. 2,27,795

தேர்வு செய்யப்படும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/08/TNPL-General-Mana... என்ற தளத்தில் இருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து Executive Director (Operations) Tamil Nadu Newsprint and Papers Limited No.67, Mount Road, Guindy, Chennai – 600032, Tamil Nadu என்ற முகவரிக்கும் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க  |பான் கார்டு மூலம் தனிநபர் கடன் பெறலாம்; இதோ வழி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News