Fuel Credit Card: இந்தியன் ஆயில், கோடக் மஹிந்திரா வங்கியுடன் இணைந்து புதிய எரிபொருள் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அட்டையின் உதவியுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நல்ல தள்ளுபடியை பெறுவீர்கள். கோடக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளர்கள் இந்த அட்டையைப் பயன்படுத்தி எந்த இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்பிலும் வெகுமதி புள்ளிகளைப் பெறலாம். அதிக ரிவார்டு புள்ளிகளைச் சேகரித்தால், பெட்ரோலையும் இலவசமாகப் பெறலாம். ரிவார் புள்ளிகளுக்கு ஏற்ப இலவசமாக பெட்ரோல்-டீசல் கிடைக்கும்.
மாதாந்திர தள்ளுபடி ரூ.500 வரை
இந்த கிரெடிட் கார்டின் உதவியுடன் எரிபொருள் நிரப்பினால், ஒவ்வொரு மாதமும் ரூ.300 வரை வெகுமதிகளைப் பெறலாம். இருப்பினும், இந்த எரிபொருளை இந்தியன் ஆயில் நிலையத்தில் தான் நிரப்ப வேண்டும். மறுபுறம், பெட்ரோல் பம்பில் உள்ள கடையில் நீங்கள் மளிகை பொருட்கள், உணவகங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்கு மாதாந்திரம் ரூ. 200 வரை அல்லது 2% தள்ளுபடி பெறலாம்.
கூடுதல் கட்டணம் தள்ளுபடி மற்றும் ஸ்மார்ட் EMI வசதி
அதே நேரத்தில், கூடுதல் கட்டணமும் விலக்கு அளிக்கப்படும். கூடுதல் கட்டணத்தில் 1% தள்ளுபடியுடன், நீங்கள் ரூ.100 வரை மாதத் தள்ளுபடியைப் பெறலாம். வட்டியில்லா கடன் 48 நாட்களுக்கு அனுமதிக்கப்படும். ஸ்மார்ட் EMI வசதியும் உள்ளது. அதேசமயம் கார்டு தொலைந்து விட்டால், கட்டணம் ஏதும் கொடுக்க வேண்டாம். அதே சமயம் டாப் எண்ட் பே மூலம் பணம் செலுத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Gold Loan: குறைந்த வட்டியில் நகை கடன்களை வழங்கும் ‘சில’ வங்கிகள்
இந்தியன் ஆயில் உலகின் மிகப்பெரிய எரிபொருள் விநியோக நிறுவனம்
இந்தியன் ஆயில் உலகின் மிகப்பெரிய எரிபொருள் விநியோக நிறுவனமாகும், இது நாடு முழுவதும் 34 ஆயிரம் எரிவாயு நிலையங்களைக் கொண்டுள்ளது. வணிகத்தை மேலும் அதிகரிக்கவும், ஆன்லைனில் விளம்பரப்படுத்தவும், நிறுவனம் எரிபொருள் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூபே தளத்தில் எரிபொருள் கிரெடிட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோடக் மஹிந்திரா மற்றும் இந்தியன் ஆயிலின் ரூபே கிரெடிட் கார்டுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் ராஜீவ் பிள்ளை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஏசியை தாராளமாக பயன்படுத்தலாம்! மின்சார பில் ஷாக் அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ